scorecardresearch

அப்பா பக்கத்துல இல்லை தங்கம்… அழாதமா… மனதை உருக்கும் தந்தை – மகன் பாசம்

இளைஞர் ஒருவர் தனது அப்பாவை பிரிந்த விரக்தியில் அழுவதும் அவருக்கு அப்பா ஆறுதல் சொல்வது தொடர்பான ஆடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது

அப்பா பக்கத்துல இல்லை தங்கம்… அழாதமா… மனதை உருக்கும் தந்தை – மகன் பாசம்

அப்பா பக்கத்தில் இல்லை என்று கலங்காதே தங்கம் என்று தன்னை பிரிந்து அழும் மகனிடம் அப்பா பேசும் ஆடியோ குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் முக்கிய பொதுபோக்கு அம்சமாக சமூக வலைதளங்கள் மாறிவிட்டது. தினசரி நிகழ்வுகள், செய்திகள், பொழுதுபோக்கு வீடியோக்கள் சுற்றுலா உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் உள்ள இந்த வலைதளங்களில் அவ்வப்போது மனதை உருக்கும் சில பதிவுகளும் இடம்பெறுவது வழக்கம்.

அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது அப்பாவை பிரிந்த விரக்தியில் அழுவதும் அவருக்கு அப்பா ஆறுதல் சொல்வது தொடர்பான ஆடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரின் மனதை ஆக்கிரமித்துள்ளது என்றே சொல்லலாம். நீ ஏன் அப்படி நினைக்கிற அப்பா பக்கத்தில் இல்ல ஆனாலும் நீ எப்போ போன் பண்ணுவ சாப்பிட்டியா இல்லையா என்று யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

பையன் டென்சன் ஆகிடுவானே என்ன பண்றது என்ன பண்றது என்று நினைத்தக்கொண்டுதான் இருக்கிறேன். அப்பா கிளம்பி வந்துடலாமா என்று அவர் கேட்க பையன் அழுதுகொண்டே நானே கிளம்பி வருகிறேன் என்று பையன் சொல்கிறார். அதை என் இப்படி சொல்ற நல்ல பேசு. என்ன நடந்துச்சு இப்போ டென்சன் ஆகிட்டு அழுக்க நீ அழுதா அப்பா மனசு தங்காதுமா.

அழக்கூடாதுமா அழக்கூடாதுமா அப்பாவுக்கு சாப்பிட்டு போன் பணணுங்க. எதையும் நினைக்காதையா இன்னும் வாழக்கை இருக்கு எதையுமே உண்மையா பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும். எதையுமே ஏன் எண்ட் கார்டு போடுற இப்போதா வாழக்கையில் முதல் படி வைக்கிற இன்னும் மேல ஏறி போகனும். நீ சாப்பிட்டு அப்பாவுக்கு போன் பண்ணுமா என்று முடியும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இசக்கி தேவா என்ற இன்ஸ்டாகிராம் பககத்தில் பதிவிடப்பட்டுள்ளது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil viral video on instagram daddy and son emotional conversation