நாட்டின் 78"வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக தமிழக அளவில் 78 ஆயிரம் மாணவ – மாணவிகள் யோகாவில் சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையில், தமிழகம் முழுவதும் 78"ஆயிரம் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்ட நிலையில், கோவையை சேர்ந்த மாணவ,மாணவிகள் பத்மாசனத்தில் அமர்ந்து தேசிய கொடியை இரு கைகளில் உயர்த்தி பிடித்து உற்சாகமாக யோகா செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 240 மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 78 ஆயிரம் மாணவ,மாணவிகள் யோகாவில் புதிய உலக சாதனை செய்துள்ளனர். கோவையில் உள்ள சக்தி சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளும் இந்த உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்டனர். சுமார் ஐந்து வயது முதலான குழந்தைகள் முதல் கலந்து கொண்ட இந்த சாதனையில், மாணவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்த படி இரு கைகளிலும் தேசிய கொடியை உயர்த்தி பிடித்து 78 விநாடிகள் தொடர்ந்து அமர்ந்து வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்..
சாதனை நிகழ்வை கண்காணிக்க யூனியன் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் அமெரிக்காவில் இருந்து நேரடியாக வந்து சாதனை நிகழ்வை பார்வையிட்டார். பத்மாசனத்தில் அமர்ந்த மாணவ,மாணவிகள் தேசிய கொடியை பிடித்து உற்சாகமாக அசைத்தபடி யோகா செய்த இந்த சாதனை வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளியின் தாளாளர் தீபன் தங்கவேலு மற்றும் யோவா யோகா அகாடமியின் இயக்குனர் வைஷ்ணவி ஆகியோரிடம் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். தமிழக அளவில் உலக சாதனை நிகழ்வாக நடைபெற்ற இதில் கோவை மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டதை பள்ளியில் பயலும் சக மாணவர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“