ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்... திருச்சி மக்களுக்கு கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நாளை ஆடிபெருக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் காவேரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை ஆடிபெருக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் காவேரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Srirangam

திருச்சி ஆடிப்பெருக்கு

தமிழ்நாட்டில் நீர்நிலைகள் உள்ள இடங்களில் பல நூற்றாண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும், குறிப்பாக, காவிரி பாயும் தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட காவிரிப்படுகையில் கொண்டாடப்படும் ஆடிபெருக்கு மிக உற்சாகமாகவும்,  கோலாகலமாகவும், குதூகலத்துடனும் நடைபெறுவது வழக்கம்.

Advertisment

இந்தநிலையில் நாளை ஆடிபெருக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் காவேரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடிப்பெருக்கு திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் ஆழமான பகுதிகளில் இறங்கவோ அல்லது  குளிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொட்டியம் வட்டம் : - 1. உன்னியூர், 2. பெரிய பள்ளிபாளையம், சின்னபள்ளி பாளையம், 3. ஸ்ரீராமசமுத்திரம், 4. சீலைப்பிள்ளையார்புத்தூர் 5. காடுவெட்டி, 6. நத்தம், 7. எம். புத்தூர் (மேலக்காரைக்காடு, கீழகாரைக்காடு) 8. அரசலூர் (திருநாராயணபுரம், வரதராஜபுரம்), 9. சீனிவாசநல்லூர் ( மகேந்திர மங்கலம், கீழசீனிவாசநல்லூர், சத்திரம் 10. மணமேடு 11. முள்ளிப்பாடி (திருஈங்கோய்மலை) மொத்த படித்துறைகளின் எண்ணிக்கை -11

Advertisment
Advertisements

முசிறி வட்டம் :- 1. முசிறி மேற்கு – காவேரி பாலம், சந்தபாளையம், பரிசல் துறை (அழகு நாச்சியம்மன் கோவில்), அக்ரஹாரம், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம் மொத்த படித்துறைகளின் எண்ணிக்கை - 7

ஸ்ரீரங்கம் வட்டம் :- 1.பெட்டவாய்த்தலை (பழங்காவேரி படித்துறை), 2. முக்கொம்பு, 3. கம்பரசம்பேட்டை (தடுப்பணை) 4. முருங்கப்பேட்டை 5. முத்தரசநல்லூர் அக்ரஹாரபடித்துறை, 6. பர் படித்துறை, 7. அல்லூர் மேலத்தெரு படித்துறை, 8. திருச்செந்துறை வெள்ளாளர் தெரு படித்துறை, 9. அந்தநல்லூர் படித்துறை, 10. திருப்பராய்துறை - துலாஸ்தானம் 11. மேலூர் அய்யனார் படித்துறை, 12. கீதாபுரம் படித்துறை, 13. அம்மா மண்டபம் படித்துறை, 14. கருடமண்டபம் படித்துறை 15. பஞ்சக்கரை படித்துறை, 16. பனையபுரம் படித்துறை, 17. உத்தமர்சீலி நடுவெட்டி படித்துறை 18. கிளிக்கூடு படித்துறை

மண்ணச்சநல்லூர் வட்டம் : - 1. கரியமாணிக்கம் மேற்கு கிராமம் - வாத்தலை, 2. கரியமாணிக்கம் கிழக்கு கிராமம் - சிறுகாம்பூர், 3. திருவாசி கிராமம் - துடையூர் களிங்காயிகோவில், 4. மாதவ பெருமாள் கோவில் கிராமம் - நொச்சியம் மான்பிடி மங்களம், 5. பிச்சாண்டார் கோவில் கிராமம் - அய்யன் வாய்க்கால்

திருவெறும்பூர் வட்டம் :- 1. வேங்கூர் பூச படித்துறை, 2. பனையக்குறிச்சி படித்துறை, 3. கீழ முல்லக்குடி படித்துறை, 4. ஒட்டக்குடி படித்துறை

இலால்குடி வட்டம் :- 1. கொள்ளிடம் ஆறு மற்றும் பங்குனி வாய்க்கால் - அப்பாத்துரை கிராமம், 2. கொள்ளிடம் ஆறு - கூகூர், அரியூர் (செங்கரையூர் மற்றும் பூண்டி பாலம்) விரகாலூர் மற்றும் தின்னக்குளம், நத்தமாங்குடி

மாநகரப்பகுதி :- 1. அம்மா மண்டபம், 2. கருடா மண்டபம், 3. கீதாபுரம், 4. சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை - 2, 5. காந்தி படித்துறை 6. ஓடத்துறை 7. அய்யாளம்மன் படித்துறை, 8. தில்லைநகர் படித்துறை - 2 ஆடி -18 மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் ஆற்றுப் பகுதிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை முற்றிலும் தவிர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை,  ஊரக வளர்ச்சித்துறை காவல்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை மற்றும்  மீட்புப்பணிகள் துறைகளைச் சார்ந்த பணியாளர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குவதோடு, மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி எவ்வித அசம்பாவிதம் இன்றி பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேநேரம் ஆடிப்பெருக்கு நிகழ்வையொட்டி 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வழக்கமாக களைகட்டும் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை திடீரென தவிர்க்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். பல்வேறு அமைப்பினரும் ஆட்சியருக்கு தற்போது உள்ளூர் விடுமுறை வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: