Advertisment

400 வகை உணவுகள்: 600 கேட்டரிங் நிறுவனங்கள்; கோவையில் தயாராகும் பிரம்மாண்ட உணவு திருவிழா!

கோவை விழாவுடன் இணைந்து தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் சார்பில் பிரம்மாண்ட உணவு திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Catring

தமிழ் நாடு கேட்டரர்ஸ் சங்கம் நடத்தும் பிரம்மாண்ட உணவு திருவிழா மற்றும் திருமண கண்காட்சி வருகின்ற நவம்பர் 30" ஆம் தேதி மற்றும்  டிசம்பர் 1"ஆம் தேதி என இரு நாட்கள் கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான லோகோ வெளியீடு நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

Advertisment

நிகழ்வு குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்கங்களை ஒருங்கிணைந்த தலைவர் நாகராஜ் கூறுகையில், ஆண்டு தோறும் கோவையின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் கோவையில் கோவை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவை விழாவுடன் இணைந்து தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் சார்பில் வருகின்ற நவம்பர் 30"ஆம் தேதி மற்றும் டிசம்பர் 1"ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா மைதானத்தில் மாலை"6 மணி முதல் இரவு 10"மணி வரை பிரம்மாண்ட உணவு திருவிழா நடைபெற உள்ளது.

இந்த உணவு திருவிழாவுடன் இந்த ஆண்டு திருமண கண் காட்சியையும் நடத்த உள்ளது. இந்த  உணவு திருவிழாவில், 1000"த்திற்க்கும் மேற்பட்ட கேட்டரிங் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளது. இந்த உணவு திருவிழாவிற்க்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் சைவம் மற்றும் அசைவம் என சுமார் 300"க்கும் அதிகமான தரமான விதவிதமான  உணவு வகைகளை உண்ணலாம். இந்த உணவு திருவிழாவில் 400 வகையான உணவுகளை சுமார் 600 கேட்டரிங் நிறுவனங்கள் தயாரிக்க உள்ளார்கள்.

சுமார் 20,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிகழ்வில் பிரபல சூப்பர் சிங்கர்ஸ்,நடன கலைஞர்கள், நகைச்சுவை கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க பெரியவர்களுக்கு 800"ரூபாய் கட்டணமாகவும் சிறியவர்களுக்கு 500"ரூபாய்  கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

பி.ரஹ்மான்.கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment