கனடாவில் மருத்துவ படிப்பு; தமிழகத்தில் பெரிய அரசியல் பிரபலம்: இந்த போட்டோவில் இருக்கும் டாக்டர் யார் தெரியுமா?

தமிழகத்தின் ஒரு முக்கிய அரசியல் புள்ளி தான் மருத்துவம் படிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் ஒரு முக்கிய அரசியல் புள்ளி தான் மருத்துவம் படிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamilisai Soundararajan

இன்றைய காலக்கட்டத்தில் பிரபலமாக இருக்கும் பலரும் அவர்கள் படித்த படிப்பு வேறாக இருக்கும். படித்த படிப்புக்கு சம்மந்தமே இல்லாத வேறு வேலை செய்வதும், சினிமாவில் வேலை பார்ப்பது இப்போது அதிகமாக உள்ளது. குறிப்பாக மருத்துவம் படித்த பலர் சினிமா துறையில் இருப்பது போல், அரசியலிலும் பல டாக்டர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு முக்கிய அரசியல் புள்ளி தான் மருத்துவம் படிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisment

தமிழக காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் தான் குமரி ஆனந்தன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து விலகி இருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். அப்பா காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தாலும், மகள் தமிழிசை சௌந்திரராஜன் காங்கிரஸ் கட்சியின் எதிர்கட்சியான பா.ஜ.கவில் இணைந்தார்.

Tamil 1

Tamil 2

Advertisment
Advertisements

Tamil 3

சிறுவயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் காட்டிய தமிழிசை, கடந்த 1999-ம ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது மாணவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2001-ம் ஆண்டு தென்மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளராகவும், 2007-ம் ஆண்டு மாநில பொதுச்செயலாளர், 2013-ம் ஆண்டு பா.ஜ.க.வின் தேசிய செயலாளராகவும் பதவியில் இருந்துள்ளார். அதேபோல் தமிழக பா.ஜ.க தலைவராகவும் இருந்துள்ள இவர், 2019-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். 

Tamil 4

Tamil 5

Tamil 6

அதன்பிறகு, 2021-ம் ஆண்டு இவருக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆளுனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அரசியலில், அப்பா ஒரு மூத்த தலைவராக இருந்த நிலையில், தமிழிசையும், தமிழக அரசியலில், அனைவரும் அறிந்த முகமாக இருக்கிறார். ஆனால் இவருக்கு தேர்தல் வெற்றி மட்டும் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் ராதாபுரம் தொகுதி, 2011-ல் வேளச்சேரி, 2016-ல் விருகம்பாக்கம் என 3 சட்டசபை தேர்தல்களை சந்தித்த தமிழிசை சௌந்திரராஜன், திமுகவிடம் ஒருமுறை, அதிமுகவிடம் இருமுறை தோல்வியை சந்தித்துள்ளார். 

Tamil 7

Tamil 8

Tamil 9

அதேபோல், 2009-ல் நாடாளுமன்ற தோதலில், வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு திமு.க.விடம் தோல்வியை சந்தித்த தமிழிசை, அதன்பிறகு, 10 வருடங்களுக்கு பிறகு, 2019-ம் ஆண்டு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க. கனிமொழியிடம் தோல்வியை சந்தித்தார், கடந்த2024 தேர்தலில், தென் சென்னையில் போட்டியிட்டு தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் தோல்வியடைந்தார். தற்போது தமிழக பா.ஜ.கவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழிசை அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

Tamil 10

இதனிடையே 1990-ம் ஆண்டு தான் கனடாவில் மருத்துவம் படிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு பாராட்டுக்களையும், ட்ரோல்களை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

Dr Tamilisai Sounderrajan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: