தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தம். வாஸ்து சாஸ்திரப் படி, தீபாவளி தினத்தன்று பசு நெய் விட்டு விளக்கேற்றுவது என்பது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதாக கருதப்படுகிறது. விளக்குகள் நம்முடைய ஆன்மாவைக் குறிப்பதாக ஒரு நம்பிக்கை.
தீபங்கள் ஏற்றுவதன் மூலம் வீட்டிலும் நம் மனதினலும் உள்ள எதிர்மறை விஷயங்களை அகற்றி, நேர்மறை எண்ணங்கள், நல்லவை வீட்டுக்குள்ளும் மனதுக்குள்ளும் நுழையும் என்பது ஐதீகம். தீபாவளி பண்டிகையை அமாவாசை நாளில் கொண்டாடுகிறோம். அதனால் இரவின் இருளைப் போக்கவும், ஒளியை அளிக்கவும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
நாம் நம்முடைய வீட்டுக்குள் நேர்மறை சிந்தனையை வரவேற்க விளக்கேற்றும் முறைகளும் உள்ளன. இதனிடையே கோவை மாநகரில் காந்திபுரம், டவுன்ஹால் போன்ற பகுதிகளில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டு உள்ளது. கடைகளும் வீதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவை மாநகரமே தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் வடகோவை மேம்பாலப் பகுதியில் உள்ள பூங்காவை ஆண்டுதோறும் பராமரிக்கும் தனியார் நிறுவனம் கண்கவர் மின் விளக்குகளால் அலங்கரித்து அனைவரின் கவனத்தை ஈர்க்க செய்வார்கள். இந்தாண்டும் அதேபோன்று பல்வேறு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. அதனை அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தும், மகிழ்ச்சியுடன் கடந்து செல்கின்றனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“