கேரள மாநிலம் காந்தளூர் பகுதியில் குச்சி வடிவில் அதிசய பூச்சி தென்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த புகைப்பட கலைஞர் பாலா அவரது செல்போனில் இதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு அதிக அளவு வைரலாகி தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.
இந்த பூச்சி பார்ப்பதற்கு குச்சி வடிவில் தென்படுகிறது. அருகில் சென்று பார்த்தால் தான் அதற்கு கண்கள் இருப்பது தெரிகிறது. உலகில் இலை போல் இருக்கும் பூச்சி எவ்வளவு வியப்பாக காணப்படுகிறதோ அது போலவே இதனையும் மக்கள் பார்க்கின்றனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“