கடலூர் மாவட்டத்தில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக மோப்ப நாய் கடலூர் மாவட்டம் காவல்துறையில் சேர்க்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் தமிழக காவல்துறையில் புதிதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டதின்பேரில் 35 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு ஒரு (Narcotic Dog) மோப்ப நாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று (28.03.2025)- ந்தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு புதியதாக வழங்கப்பட்ட Belgian Malinois என்ற இனத்தை சேர்ந்த மோப்ப நாய்க்கு "ராக்கி" என பெயர் சூட்டி வாழ்த்தினார்.
மேற்படி மோப்பநாய் 18.8.25 தேதி முதல் கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்த பின்பு கடலூர் மாவட்டம் மோப்பநாய் படைபிரிவில் சேர்க்கபட்டு போதை பொருட்களை பதுக்கி வைக்கப்பட்ட இடங்களை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவிடவும், மாவட்டத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுபடுத்தவும் பயன்படுத்த உள்ளது . துணை காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் இளங்கோவன் மற்றும் மோப்பநாய் பிரிவு போலீசார் உடன் இருந்தனர்