scorecardresearch

500 கிலோ அரிசி… 500 கிலோ சிக்கன்… கோவையில் சமத்துவ ரம்ஜான் பிரியாணி விருந்து

கோவை வின்சென்ட் சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கிரீன் கார்டன் வளாகத்தில் ஆண்டுதோறும் ரம்ஜான் பிரியாணி செய்து அனைவருக்கும் வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவர்.

Raamzaan Briyani
ரம்ஜான் பிரியாணி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை கிரீன் கார்டன் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் 500 கிலோ அரிசியும் 500 கிலோ சிக்கனும் சேர்த்து “ரம்ஜான் பிரியாணி” விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்ளப்பட்டு புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

கோவையிலும் பல்வேறு இடங்களில் ரம்ஜான் தொழுகைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து ரம்ஜான் பண்டிகையில் இஸ்லாமியர்களின் சிறப்பு உணவாக கருதப்படும் பிரியாணியை உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவர்.

அந்த வகையில் கோவை வின்சென்ட் சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கிரீன் கார்டன் வளாகத்தில் ஆண்டுதோறும் ரம்ஜான் பிரியாணி செய்து அனைவருக்கும் வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவர். இங்கு வசிக்கும் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் முன்வந்து ரம்ஜான் பிரியாணி செய்வர்.

அதன்படி இந்த ஆண்டும் சிறப்பான முறையில் பிரியாணி தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கி கிரீன் கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தினர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு 500 கிலோ அரிசியில் 500 கிலோ சிக்கன் சேர்த்து  சுமார் 3000 பேருக்கும் மேல் வழங்கும் வகையில் பிரியாணி தயார் செய்து அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் உக்கடம் சரக உதவி ஆணையாளர் வீரபாண்டி, உக்கட காவல் நிலைய ஆய்வாளர், சரவணன், உதவி ஆய்வாளர் ரேணுகாதேவி, கோவை மாநகர மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், 82 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முபஷிரா, அனைத்து ஜமாத் கொள்கை கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஹினாத்துல்லாஹ், போத்தீஸ் துணிக்கடை மேலாளர் சக்தி நாராயணன், சபையர், பைசல், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் முத்தப்பா, பிஎச் முபாரக், நச்சுமுதீன், அர்ஷத் முகமது, அசாருதீன், சபிக் ரஹ்மாம், ஆகியோர் செய்திருந்தனர்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu equality ramzaan festival briyani making in coimbatore

Best of Express