தமிழ்நாடு அரசு, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக "அன்பு கரங்கள்" என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரை மாதம் ரூ.2,000 வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, அந்தக் குழந்தைகள் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கு உதவப்படுவார்கள்.
யார் யார் தகுதியானவர்கள்:
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள்.
பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவரால் குழந்தையைப் பராமரிக்க முடியாத சூழல்.
பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலை.
பெற்றோரில் ஒருவர் சிறையில் இருக்கும் நிலை.
பெற்றோரில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலை.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை நகல்
குழந்தையின் ஆதார் அட்டை நகல்
பிறப்புச் சான்றிதழ் அல்லது வயதுக்கான கல்விச் சான்றிதழ்கள்
குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல்
இந்த ஆவணங்களுடன், "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு இந்தத் திட்டத்தின் பலனைப் பெறலாம்.