இனி ஆன்லைனில் பெறலாம்… மானிய விலையில் வீட்டுத் தோட்டம் செடிகள்- விதைகள்!

தேசிய வேளாண்மை வளா்ச்சித்திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலமாக மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைப்பதற்குத் தேவையான பொருள்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

Tamilnadu government Roof Garden Kit
Tamilnadu government Roof Garden Kit with subsidy now available in online

வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், மானிய விலையில் ‘கிட்’ வழங்கப்படுகிறது.இந்த திட்டம் தற்போது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொகுப்பில், ஆறுவகையான காய்கறி பாக்கெட்டுகள், செடிவளா்ப்பு பைகள், தென்னை நார்க்கழிவு, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா, உயிரியல் பூச்சிக்கொல்லி டிரைகோடொ்மா, வேப்பஎண்ணெய் இவற்றுடன் செயல்முறை விளக்க குறிப்பேடு வழங்கப்படுகிறது.

மாடித்தோட்டம் அமைப்பதற்குத் தேவையான கிட் மட்டுமல்லாது சொட்டு நீர் குழாய் அமைப்புகளையும் அரசு மானிய விலையில் வழங்குகிறது.

உங்கள் அருகில் உள்ள மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், ஆதார் அட்டை நகலை அளித்து விதைகள், இயற்கை உரம் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட பையை பெற முடியும். அத்துடன் விற்பனையகங்களை தேடி வரும் மக்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் அதைப் பராமரித்தல் குறித்த விளக்கமும் அளிக்கப்படுகிறது.

தற்போது இந்த தொகுப்புகள் அனைத்து மக்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில், இணையதளம் வழியாகப் பெறும் புதிய முயற்சியை அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன்படி மாடித்தோட்ட கிட் வாங்க விரும்புவோர் https://tn.horticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தில், தங்கள் புகைப்படத்தையும், ஆதார் புகைப்படத்தையும், தேவையான காய்கறி தொகுப்புகளையும் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

எனவே மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.      

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu government roof garden kit with subsidy now available in online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com