/indian-express-tamil/media/media_files/2025/02/09/RPU0UxxCAy1NHKkzXo2V.jpg)
மகளிர் பாதுகாப்பு குறித்து குறும்படப் போட்டி Photograph: (Freepik)
மகளிர் பாதுகாப்பு, குழந்தைகள் மீதான குற்றங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படப் போட்டி தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. பொதுமக்களும், மாணவர்களும் (பள்ளி மற்றும் கல்லூரி) இதில் கலந்து கொள்ளலாம்.
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், “பெண் குழந்தைகளை காப்போம்- குழந்தைகளுக்கு பாதுகாப்பு” என்ற தலைப்பில் குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளது.
இந்த குறும்பட போட்டிக்கான போஸ்டரை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜுவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.இளம்பகவத் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இதை காமராஜ் கல்லூரி விஸ்காம் மாணவர்கள் மற்றும் அன்புராஜ் பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் சிறப்பம்சங்கள்
போட்டி இரு பிரிவுகளில் நடத்தப்படும்:
பொதுமக்கள் பிரிவு
மாணவர்கள்பிரிவு (பள்ளி மற்றும் கல்லூரி)
தலைப்புகள்
• இணைய மிரட்டல்
• குடும்ப வன்முறை & வரதட்சனை கொடுமை
• பணியிட பாலியல் தொல்லை
• குழந்தை திருமணம் & இளம் வயது கர்ப்பம்
சிறந்த 3 குறும்படங்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்
முதல்பரிசு- ரூ. 25 ஆயிரம்
இரண்டாம்பரிசு- ரூ. 15 ஆயிரம்
மூன்றாம்பரிசு- ரூ. 10 ஆயிரம்
பொதுமக்கள் பிரிவு, மாணவர்கள் பிரிவு ஆகியவற்றிற்கு தனித்தனியே முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
சிறந்த குறும்படங்களுக்கு தமிழக அரசின் பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறப்பு விருது வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025
குறும்படங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 14.03.2025
மேலும் விபரங்களுக்கு: https://lnxstgweb.tn.gov.in/tuty/sfc2024/ என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.