வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழா; 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் 600 சிறப்பு பேருந்துகள் நேற்று (29-08-2025) இயக்கப்பட்டன என நிர்வாக இயக்குநர் தசரதன் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் 600 சிறப்பு பேருந்துகள் நேற்று (29-08-2025) இயக்கப்பட்டன என நிர்வாக இயக்குநர் தசரதன் தெரிவித்துள்ளார்

author-image
WebDesk
New Update
Bus fare hike

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா  பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் 600 சிறப்பு பேருந்துகள் நேற்று (29-08-2025) இயக்கப்பட்டன என நிர்வாக இயக்குநர் தசரதன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழா 2025-ஐ முன்னிட்டு 28.08.2025 முதல் 09.09.2025 வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறன.

அதே போன்று பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு, வேளாங்கண்ணியிலிருந்து 28.08.2025 முதல் 09.09.2025 வரை இரவு / பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்,  கும்பகோணம் சார்பில்  இயக்கப்படுகின்றன. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவின் தொடக்கமாக 29.08.25 அன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்விற்கு தமிழ்நாடு அரசு கும்பகோணம் சார்பில் 600 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்கள் மற்றும் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.  விழா முடியும் வரை தினசரி 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

இச்சிறப்பு பேருந்துகளின் சேவைகளை நிர்வாக இயக்குநர் தசரதன் அவர்களுடன் இணைந்து பொது மேலாளர் முத்துக்குமாரசாமி, துணை மேலாளர்கள் தமிழ்செல்வன், சிதம்பரகுமார், ராஜேஷ், ராமமூர்த்தி, உதவி பொறியாளர் ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் இணைந்து பணியாற்றினார்கள். எனவே, இச்சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்டவாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக குடந்தை கோட்ட நிர்வாக இயக்குனர் தசரதன் தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: