Advertisment

மாடித் தோட்டம் அமைக்க விருப்பமா? தமிழக அரசின் கிட் ரூ450 தான்; எப்படி வாங்குவது?

மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் தொகுப்பு வழங்கும் தமிழக தோட்டக்கலைத் துறை; ரூ450 மதிப்புள்ள தொகுப்பை பெறுவது எப்படி?

author-image
WebDesk
New Update
vegetable garden

தமிழக அரசின் மாடித் தோட்டங்களுக்கான தொகுப்பு மானிய விலையில் கிடைக்கும் என்றும், ஒருவர் இரண்டு தொகுப்புகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

மாடித் தோட்டம் என்பது பலரின் விருப்பம். தரையில் இடம் இல்லாதவர்கள் மாடித் தோட்டம் அமைக்க விரும்புவர். இந்த மாடித் தோட்டத்தில் பூச்செடிகள் மட்டுமல்லாமல், காய்கறிச் செடிகளையும் வளர்த்து வருகின்றனர். தமிழகத்தில் சில காலமாகவே காய்கறிகளின் விலை அதிகமாகவே உள்ளது. இதனையடுத்து பலரும் மாடித் தோட்டத்தை அமைக்க திட்டமிட்டு வருகின்றனர்.

மேலும், சந்தைகளில் கிடைக்கும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களின் அபாயமும் உள்ளது. இதனால் இயற்கை முறையில் தாங்களாகவே காய்கறிகளை விளைவித்து சாப்பிட விரும்புபவர்களுக்கு மாடித் தோட்டம் தான் பெஸ்ட் சாய்ஸ்.

இந்த மாடித் தோட்டம் அமைப்பதற்கான பொருட்கள் தனியார் நிறுவனங்களில் கிடைக்கின்றன. அதேசமயம் தமிழக அரசும் மாடித் தோட்டங்களுக்கான செடி வளர்ப்பு பைகள், தென்னை நார்க் கழிவு, விதைகள் மற்றும் உயிர் உரங்களின் தொகுப்புகளை வழங்கி வருகிறது. நகர்புற காய்கறி உற்பத்தி திட்டத்தின் கீழ் மானிய விலையில் இந்தத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாடித் தோட்ட தொகுப்பில் அடங்கியுள்ள பொருட்கள்

செடி வளர்ப்பு பைகள் - 6

6 கிலோ எடையுள்ள தென்னை நார்கழிவு கட்டிகள் - 2

6 வகையான காய்கறி விதைகள் (அதிக மகசூல் தரும் வீரிய ஒட்டு ரகம் மற்றும் பாரம்பரிய வகைகள்) (அரசு நிறுவனம் மூலம்) - 6 விதை பொட்டலங்கள் (ரூ.10/பொட்டலம்)

அசோஸ்பைரில்லம் (அரசு நிறுவனம் மூலம்) - 300 கிராம்

பாஸ்போ பாக்டீரியா (அரசு நிறுவனம் மூலம்) - 300 கிராம்

ட்ரைக்கோடெர்மா விரிடி (அரசு நிறுவனம் மூலம்) - 200 கிராம்

வேப்பெண்ணெய் - 100 மி.லி

மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு முறைக்கான கையேடு

இந்தத் தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.900 ரூபாய். ஆனால் மானிய விலையில் 450 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. மாடித்தோட்ட தொகுப்பு வாங்குபவர்கள் 450 ரூபாயை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை வாங்கிக் கொள்ளலாம். இந்த தொகுப்பை பெற விரும்புபவர்கள் https://www.tnhorticulture.tn.gov.in/kit/ என்ற தோட்டக்கலை இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்தும் பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே தோட்டக்கலைத்துறை வழங்கும் மானிய விலை மாடித்தோட்ட கிட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. சரிவர கிடைப்பதில்லை என்ற புகார்கள் கிளம்பியுள்ளன.

இந்தநிலையில், "மானிய விலை மாடித்தோட்ட தொகுப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மானிய விலை மாடித்தோட்ட தொகுப்புகள் ஆண்டுதோறும் இவ்வளவு வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து தோட்டக்கலைத்துறை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான மாடித்தோட்ட தொகுப்புகள் வழங்குவதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட்டிலிருந்து மானிய விலை மாடித்தோட்ட தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்படும். தற்போது மானிய விலை மாடித்தோட்ட தொகுப்பு கிடைக்க பெறாதவர்கள் சென்னையிலுள்ள தோட்டக்கலைத்துறையை அணுகினால் வழிகாட்டப்படும்" என்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Terrace Garden Tamilnadu Govt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment