காரில் சீட் பெல்ட் அணிந்து செல்வதால் என்ன பயன், எப்படி உயிர் சேதம் எப்படி தடுக்கப்படுகிறது என ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடையே காரில் சீட் பெல்ட் அணிவதால் நாம் எப்படி காப்பாற்றப்படுகிறோம் என்பதை ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்டாலின் செயல்முறை விளக்கத்துடன் விளக்கினார். இணையத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில்,
காரில் நாம் சீட் பெல்ட் அணிந்து செல்லும்போது, ஏதேனும் மோதல் ஏற்பட்டால் நாம் முன்னால் செல்லாமல் தடுக்கப்படுகிறோம். சீட் பெல்ட்டை இயல்பான நிலையில் மெதுவாக இழுத்தால் விரிவடையும், அதேநேரம் திடீரென வேகமாக இழுத்தால் விரிவடையாது. எனவே நாம் இறுக்கமாக பற்றிக் கொள்ளப்படுவோம். இதனால் மூச்சு திணறல் ஏற்படுமா என்றால், ஏற்படாது. ஏனெனில் ஒரு மோதலின்போது வாகனம் பலமுறை அதிர்வுக்குள்ளாகும். ஒவ்வொரு முறை அதிர்வுக்கு உள்ளாகும்போதும், சீட் பெல்ட் இறுக்கடைந்து தளர்வடையும். எனவே வாகனம் நின்றாக, சீல்பெல்ட்டை விலக்கி நாம் எளிதாக வெளியே வரலாம்.
சீட் பெல்ட் அணிந்து இருந்தால் வாகனம் பத்து முறை உருண்டாலும் நமக்கு எதுவும் ஆகாது. அதேநேரம் சீட் பெல்ட் அணியாவிட்டால், வாகனம் உருளும் ஒவ்வொரு முறையும் நமக்கு நான்கு முறை அடிபடும். எனவே உயிரிழப்புக்கான வாய்ப்பு அதிகம். அதேநேரம், சீல் பெல்ட் அணிந்து இருந்தால், நாம் ரோல்கோஸ்டரில் உள்ளது போல் பாதுகாப்பாக இருப்போம்.
காரில் முன்பக்கம் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கே அதிக ஆபத்து உள்ளது. உலக சுகாதார நிறுவனம் கூற்றுப்படி, முன்பக்கம் இருப்பவர்கள் 40 சதவீதமும், பின்பக்கம் இருப்பவர்கள் 70 சதவீதம் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் பின்னால் இருப்பவர்கள் அதிக வேகத்தில் முன்னால் உள்ள கண்ணாடியில் மோதுவதால், அவர்கள் தான் முதலில் இறப்பார்கள். எனவே பின்னால் இருப்பவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும்.
மேலும் சீட் பெல்ட் அணிந்து இருந்தால் தான் ஏர்பேக்கும் நம்மை காப்பாற்றும். ஏனெனில் வாகனத்தின் பக்கவாட்டில் மோதல் ஏற்படும்போது, நாம் சீட் பெல்ட் அணியாவிட்டால் பக்கவாட்டில் சாய்வோம். அதேநேரம் ஏர்பேக் 400 கி.மீ வேகத்தில் நேராக வெளிவரும். அதனால் அது நம்மை காப்பாற்றாது. மேலும், மூச்சு திணறல் ஏற்படுவதைத் தடுக்க ஏர் பலூன் குறைந்த நேரமே செயல்படும். எனவே நாம் சீட் பெல்ட் அணிந்து சரியான நிலையில் இருந்தால் மட்டுமே காப்பாற்றப்படுவோம். இந்த தகவலை எல்லோருக்கும் கொண்டு சேருங்கள். காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட்டையும், டுவீலரில் பயணிக்கும்போது ஹெல்மெட்டையும் கட்டாயம் அணிந்து செல்லுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil