தீபாவளி பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையிலிருந்து உத்திரபிரதேசத்தில் உள்ள கான்பூர் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை - கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரயில் (01928) மதுரையில் இருந்து அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 01, 08 15, 22, 29, டிசம்பர் 06, 13, 20, 27, ஜனவரி 03 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு கான்பூர் சென்ட்ரல் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் கான்பூர் சென்ட்ரல் - மதுரை சிறப்பு ரயில் (01927) கான்பூர் சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 09, 16, 23, 30, நவம்பர் 06, 13, 20, 27, டிசம்பர் 04, 11, 18, 25, ஜனவரி 01 ஆகிய புதன் கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் காலை 09.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்கள் திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், விஜயவாடா, கம்மம், வாரங்கல், ராமகுண்டம், மஞ்சிரியால், பெல்லம்பள்ளி, சிர்பூர் காகாஸ் நகர், பல்ஹார்ஷா, சந்திராபூர், நாக்பூர், இட்டார்சி, போபால், பினா, லலித்பூர், ஜான்சி, ஒரை, பொக்ராயன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் இணைந்த இரண்டு அடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிக்கான பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) காலை 8 மணிக்கு துவங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“