தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஸ்தலமாக திருச்சி மாவட்டத்தில் இருக்கும் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. அம்மனை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். இதில் பௌர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் இரவில் கோயில் வளாகத்தில் தங்கி அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கமாகும். இந்நிலையில் இந்த மாத அமாவாசை நாளை 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினத்தன்று பிற்பகல் 3.10 மணிக்கு தொடங்கி மறுநாள் 13- ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு முடிகிறது.
எனவே, மேற்கண்ட இந்த நேரத்தில் அமாவாசை தரிசனம் செய்யலாம் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“