/indian-express-tamil/media/media_files/2025/05/19/51SJLO5EErzdFRXzrhhP.jpg)
யோகா, காயகல்ப பயிற்சியினால் உள்நோய் நீங்கும், நிறை மனமும், ஈகையோடு பொறுமை, கற்பு, நேர் நிறையும், மன்னிப்பும் உண்டாகும் என யோகா வடலூர் யோகா ஆசிரியர் அறிவுரை கூறியுள்ளார்.
வடலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மெகா காயகல்ப யோகா பயிற்சி வகுப்புகள் நடந்தது. தலைவர் டாக்டர். நடராஜன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், தலைவர் பரமசிவம், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் துளசிநாத், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய, பயிற்சியாளர் டாக்டர் பிரகதீஸ்வரன் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்வதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு அறிவுக்கூர்மையும், நினைவாற்றலும், ஒருமுகப்படுத்துதல், ஒழுக்கம் மேம்பாடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். சர்க்கரை நோய், இதய நோய்,மூலநோய்,ஆஸ்துமா, தோல் வியாதிகள், கட்டுப்பாட்டிற்கு வரும்.
மேலும் அல்சர், கண் நோய், இரத்த அழுத்தம்,நரம்பு தளர்ச்சி, மாதவிடாய் கோளாறு,கர்ப்பப்பை கோளாறு மற்றும் பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். காயகல்ப பயிற்சியினால் உளநோய் நீங்கும், நிறை மனமும், ஈகையோடு பொறுமை, கற்பு, நேர் நிறையும், மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும். மேலும் உடல் நலம் மனநலம் ஞாபகத்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சிறந்த பயிற்சி ஆகும் என்று கூறினார்.
இதில் பேராசிரியர்கள் ஜெயந்தி, சத்யா, விஜயலட்சுமி, வினோதினி, விமலா, அன்பழகன், வெங்கடேசன் சாரதா உட்பட பல கலந்து கொண்டனர். வடலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மெகா காயகல்ப யோகா பயிற்சி வகுப்புகள் நடந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.