நக்ஷத்ரா நாகேஷ் ஒரு பிரபலமான தொகுப்பாளினி மற்றும் நடிகை. சென்னையில் பிறந்து வளர்ந்த நக்ஷத்ரா நாகேஷ், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் சென்னையிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷனில் கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்தார்.

தந்தி டிவியில் ஒளிபரப்பான வானவில் நிகழ்ச்சி மூலம், நக்ஷ்த்திரா தொகுப்பாளராக தனது தொழிலை தொடங்கினார். பின்னர் சன் டிவியின் சன் சிங்கர் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் லைம்லைட்டிற்கு வந்தார்.

அதைத் தொடர்ந்து ஆடியோ லான்ஞ், விருதுகள் வழங்கும் விழா என ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 8 நடன நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் நக்ஷ்த்திரா இருந்தார்.

கானா காதல், இவள் அழகு, என் இனிய பொன் நிலாவே, மற்றும் ஏனோ வானிலை மாறுதே போன்ற பிரபலமான குறும்படங்களிலும், பாலாஜி மோகன் இயக்கிய அஸ் ஐம் சஃபரிங் ஃப்ரம் காதல் என்ற தமிழ் வெப்சீரிஸிலும் அவர் நடித்தார்.

அதில் என் இனிய பொன் நிலாவே குறும்படத்தில் நடித்ததற்காக 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த குறும்பட நடிகைக்கான ’சைமா’ விருதை பெற்றார்.

சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் உலகில் அறிமுகமானார் நக்ஷ்த்திரா. தொடர்ந்து, லஷ்மி ஸ்டோர்ஸ், நாயகி போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில், நாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் நக்ஷ்த்திரா 13க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

நக்ஷ்த்திரா நாகேஷ் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரது இன்ஸ்டாகிராமை மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

நக்ஷத்ரா நாகேஷ்-ராகவ் காதல் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இறுதியில் கோலாகலமாக நடந்தது.

நக்ஷ்த்திராவும், ராகவும் ஒரே பள்ளியில் படித்து உள்ளனர். ராகவ் நக்ஷத்ராவின் சீனியர். இருவரும் பள்ளியின் நாடககுழுவில் இருந்தனர். இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்தனர். ஆனால் நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் அரும்பியது.

ராகவ் தான் முதலில் காதை வெளிப்படுத்தியதாக ஒரு பேட்டியில் நகஷ்த்திரா குறிப்பிட்டிருந்தார்.

நக்ஷத்ரா நாகேஷ்-ராகவ் இருவருமே நிச்சயதார்த்தம் முடிந்ததிலிருந்து அதிகமாக போட்டோஷூட்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“