வெயிலில் அதிக நேரம் சென்று பணியாற்றுபவர்கள், கல்லூரி மாணவர்கள் போன்ற பலருக்கு முகம் கருமையாகும் பிரச்சனை இருக்கும். இவற்றை அழகு நிலையங்களுக்கு சென்ற சரி செய்ய வேண்டுமானால் அதிகமாக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
ஆனால், இதற்கான ஃபேஸ் பேக்கை நம் வீட்டிலேயே நம்மால் செய்து கொள்ள முடியும். முதலில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, சிறிது காபித்தூள், தயிர், ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி பசை பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
நம் முகத்தை முதலில் நன்றாக கழுவிவிட்டு அதையடுத்து இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவ வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து இதனை கழுவி விட்டு பார்த்தால் நம் முகம் பொலிவாக இருப்பதை உணர முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“