பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தப்படுவதில் தொடங்கி பல வேலைகளில் பொதுமக்கள் ஈடுபட்டிருப்பார்கள். பல பொருட்களை வாங்குவதற்கு அதிகமாக வெயிலில் சென்றிருப்பார்கள். இதனால் நிறைய பேரின் முகம் கருமையாக மாறி இருப்பதை போன்று தோன்றும்.
இவற்றை அழகு நிலையங்களுக்கு சென்ற சரி செய்ய வேண்டுமானால் அதிகமாக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால், வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு இதனை சரி செய்யாலாம்.
ஒரு தக்காளியை பாதியாக வெட்டி, அதன் உள் பகுதியில் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதைக் கொண்டு முகத்தில் தேய்த்தால் டெட் செல்கள் அனைத்தும் எளிதாக நீங்கி விடும்.
இப்போது, மீண்டும் அதே தக்காளியில் சிறிது அளவு தேன் ஊற்றி, அதைக் கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இவை இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த உதவும். மேலும், முகத்திற்கு பொலிவை கொடுக்கும்.
இறுதியாக, தக்காளியில் சிறிதளவு காபித்துள் சேர்த்து, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இதற்கு பின்னர், சுமார் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் முகம் பார்ப்பதற்கு பிரகாசமாக காட்சியளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.