ஈஸி, சுவையான தேங்காய் பிஸ்கட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
மைதா மாவு - 100 கிராம்
வெண்ணெய் - 80 கிராம்
சர்க்கரை - 40 கிராம்
வறுத்த தேங்காய் துருவல் - 25 கிராம்
வெனிலா சுகர் பவுடர் - அரை தேக்கரண்டி
பாதாம்- தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாயில் வெண்ணெய் ஊற்றி தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து எடுக்கவும். இப்போது வெண்ணெய்யுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து பாத்திரத்தில் போட்டு கலக்கவும். அதனுடன் சர்க்கரை, மைதா மாவு, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
இப்போது இதை அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பின்னர் மாவை எடுத்து எப்போதும் சப்பாத்தி செய்வது போல் தேய்த்து, தேவையான வடிவங்களில் நறுக்கி கொள்ளவும். அடுத்து எண்ணெய் தடவிய ட்ரே எடுத்து சிறிது இடைவெளி விட்டு வைக்கவும். பின் 180 டிகிரியில் ப்ரீ-ஹீட் செய்யப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான தேங்காய் பிஸ்கட் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“