இந்திய சமையலறைகளில், குறிப்பாக தென்னிந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று தேங்காய். இது எந்த சாதாரண உணவிற்கும் நிறம் சேர்க்காது. ஆனால், உடனடியாக அதன் சுவையை உயர்த்தும். தேங்காய் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. தேங்காய் சட்னி தோசை, இட்லி, வடை மற்றும் உத்தபம் போன்ற உணவுகளுக்கு சரியான தொட்டுக்கொள்ளும் துணையாகக் சாப்பிடப்படுகிறது.
அதனால்தான், இட்லியும் சட்னியும் தோசையும் சட்னியும் இணைபிரியாத உணவுகளாக தென்னிந்திய மக்களால் விரும்பி சாப்பிடப்படுப்படுகிறது.
பல்வேறு செரிமானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவுவதற்காக அறியப்பட்ட தேங்காய் சட்னியை வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளுடன் எளிதாக தயாரிக்கலாம். சமையல் கலை நிபுணர் ரன்வீர் பிரார், தனது சமூக ஊடகப் பக்கத்தில், அடிக்கடி உணவு ரெசிபிகளைப் பகிர்ந்து வருகிறார். எளிதான மற்றும் விரைவான செய்முறையைப் பகிர்ந்து கொண்டார்.
அதிலும் தேங்காய் சட்னி செய்யும்போது, அதை மேலும் சுவையுடையதாக்க கொஞ்சம் லெமன் ஜூஸ் விட்டால் போதும் டேஸ்ட்டியான தேங்காய் சட்னி ரெடி அதன் பிறகு நீங்கள் சுவையான தேங்காய் சட்னியின் துணையுடன் எத்தனை இட்லியை உள்ளே தள்ளினீர்கள் என்பதே உங்களுக்கே தெரியாமல் போய்விடும். அந்த அளவுக்கு தேங்காய் சட்னி சுவையுடையதாக இருக்கும்.
நீங்கள் உங்கள் வீட்டில் சுவையான தேங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- 1 முழு தேங்காய்
- 3-4 புதிய பச்சை மிளகாய்
- ½ தேக்கரண்டி சீரகம்
- 2 டீஸ்பூன் வறுத்த கடலை
- 6-8 முந்திரி பருப்புகள்
- 1 அங்குலம் இஞ்சி
- சுவைக்கு தேவையான அளவு உப்பு
- ½ எலுமிச்சை சாறு
வறுப்பதற்கு
- 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் / ரீஃபைண்ட் எண்ணெய் (தேங்காய் எண்ணெய் அல்லது ரீஃபைண்ட் எண்ணெய்)
- 1 தேக்கரண்டி கடுகு
- சிறிது வெந்தயம்
- 2 டீஸ்பூன் உலுத்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
- 2 காய்ந்த சிவப்பு மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
ஒரு மிக்ஸியில் , தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், வறுத்த கடலை, முந்திரி பருப்பு, இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
இதற்கிடையில், ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் விழுது எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் அரைத்ததுடன் சேர்த்து, பிறகு எல்லாவற்றையும் சரியாக கலக்குங்கள். பரிமாறும் கிண்ணத்தில் வைத்து, மீதமுள்ளதை பதமாக டெக்கரேட் செய்து சுவையான தேங்காய் சட்னியுடன் இட்லி தோசையை சாப்பிடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"