இட்லி, தோசைக்கு தினமும் சட்னி, சாம்பாரையே சாப்பிட போர் அடிக்குதா? உங்களுக்காகவே உள்ளது டேஸ்டியான ரெசிபி. செட்டிநாடு ஸ்டைல் கத்திரிக்காய் கோசுமல்லி எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – ¼ கிலோ
உருளைக் கிழங்கு – 150 கிராம்
தக்காளி – 2
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 4
வர மிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 1
கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை
முதலில் கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
புளியை ஊறவைத்து ஒரு கப்பில் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றை வேக வைக்க வேண்டும். சரியாக வெந்த உடன் நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து தாளிக்க ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடான உடன், எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வர மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய உடன் புளி சாறு சேர்த்துக் கொள்ளவும். ஒரு கொதி வந்தவுடன் மசித்த கத்திரிக்காயை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லியை தூவி, இறக்கி வைத்தால் சூப்பரான கத்திரிக்காய் கோசுமல்லி ரெடி. அப்புறம் என்ன இட்லி முதல் இடியாப்பம் வரை ஊற்றி டேஸ்ட் பண்ணுங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“