தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற உணவுகளில் ஒன்று, சாம்பார். எல்லா வகையான உணவுகளுக்கும் பொருந்தும் சாம்பாரை செய்யும் போது, இந்த சிறு மாறுதலை மட்டும் செய்ங்க. அப்பறம் டேஸ்ட் எப்படி இருக்குனு பாருங்க. அப்படியே திகைச்சுப் போயிருவீங்க.
தேவையான பொருள்கள் :
*சிவப்பு மிளகாய் – 4
*ஜீரகம் – ஒரு டீஸ்பூன்
*கொத்தமல்லி விதை – ஒரு டீஸ்பூன்
*கருப்பு மிளகு – 7
*பூண்டு – 2 பல்
*துருவிய தேங்காய் – அரை கப்
*எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
*கடுகு – ஒரு டீஸ்பூன்
*கருவேப்பிலை – 10 இலைகள்
*மோர் – ஒரு கப்
*உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பூந்தி – அரை கப்
செய்முறை :
*சிவப்பு மிளகாய், சீரகம், கொத்தமல்லி, கருப்பு மிளகு, பூண்டு,கிராம்பு மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
*கடாயில் எண்ணெயை ஊற்றி சூடான பின், தேவையான அளவு கடுகு மற்றும் கருவேப்பிலையை சேர்க்கவும்.
*சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட சின்ன வெங்காயத்தை அதோடு சேர்த்து நன்றாக வதகக்வும்.
*வேறொரு பாத்திரத்தில், அரைத்து வைக்கப்பட்டுள்ள விழுதுடன் சாம்பாரின் ஸ்பெஷலான மோரை சேர்க்கவும். அதோடு, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும். பின், பூந்தியை சேர்க்கவும். இவற்றை கடாயில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இதோ, சுவையான சாம்பார் ரெடி!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )