Advertisment

எளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி

Poondu Chatni recipe பூண்டோடு சிறிய வெங்காயம் சேர்த்துச் செய்யும்போது சுவை மேலும் அதிகரிக்கும்.

author-image
WebDesk
New Update
Tasty Garlic Chutney recipe Poondu Chatni recipes tamil

Tasty Garlic Chutney recipe

Tasty Tangy Poondu Chutney Tamil : நோய்கள் பரவும் இந்தக் காலகட்டத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையான இந்தப் பூண்டு சட்னி நிச்சயம் பலமுறை செய்யத் தூண்டும். இந்த சட்னியில் பூண்டோடு சிறிய வெங்காயம் சேர்த்துச் செய்யும்போது சுவை மேலும் அதிகரிக்கும்.

Advertisment

தேவையான பொருள்கள்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

உலர்ந்த சிவப்பு மிளகாய் - 4

கறிவேப்பிலை - 1 கொத்து

பூண்டு - 2 பெரியது

சிறிய வெங்காயம் - 15

புளி விழுது - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1/4 டீஸ்பூன்

வெல்லம் (விருப்பத்திற்கேற்ப) - ஒரு சிட்டிகை

செய்முறை

பூண்டு மற்றும் சிறிய வெங்காயத்தைத் தோலுரித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சட்னிக்கு நல்ல நறுமணத்தை நல்லெண்ணெய் கொடுக்கும்.

எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு மற்றும் உலர்ந்த சிவப்பு மிளகாய் சேர்க்கவும். காஷ்மீரி மிளகாய் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கொடுக்கும்.

மிளகாய் வறுத்து உப்பிய பிறகு, எண்ணெய்யிலிருந்து எடுத்து ஒதுக்கி வைக்கவும்.

பருப்பு பழுப்பு நிறமாக மாறிய பிறகு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.

ஒரு பிடி கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்க்கவும்.

பூண்டு மற்றும் வெங்காயம் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுத்துக்கொள்ளவும்.

வறுத்த வெங்காயம் பூண்டு கலவையோடு எடுத்து வைத்த மிளகாய், புளி, உப்பு மற்றும் ஒரு சிட்டிகை வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்தால், சுவையான பூண்டு சட்னி தயார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment