ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி… இந்த 2 பொருள் முக்கியம்!

Tasty Hotel Style Coconut Chutney Tamil News 10 நிமிடத்தில் ரெடியாகும் சுவையான ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னியை இப்படி செய்து பாருங்கள்.

Tasty Hotel Style Coconut Chutney Tamil News
Tasty Hotel Style Coconut Chutney Tamil News

Tasty Hotel Style Coconut Chutney Tamil News : என்னதான் வீட்டு ஸ்டைலில் சட்னி செய்தாலும், தேங்காய் சட்னி என்றால் அது நிச்சயம் ஹோட்டல் ஸ்டைலில் செய்தால் நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படிதான் அந்த சுவையைக் கொண்டு வருவது என்று குழம்பி இருக்கிறீர்களா? கவலையே வேண்டாம். 10 நிமிடத்தில் ரெடியாகும் சுவையான ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னியை இப்படி செய்து பாருங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்…

தேவையான பொருள்கள்

தேங்காய் – 1/2 மூடி
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 3
பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 2
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – 1/2 கைப்பிடி

செய்முறை

தேவையான பொருள்கள் அனைத்தையும் எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவேண்டும். கொரகொரப்பாகவும் இல்லாமல் நைஸாகவும் இல்லாமல் மீடியம் அளவிற்கு அரைத்துக்கொள்வது அவசியம்.

பிறகு கடாயில் எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளித்துக்கொள்ளவும். இறுதியாகக் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து, அரைத்து வைத்த சட்னியில் தாளிப்பைச் சேர்த்து சூடாகப் பரிமாறலாம்.

எப்போதுமே தாளிப்பைத்தான் சட்னியில் சேர்க்கவேண்டும், என்றைக்குமே சட்னியைத் தாளிப்பில் சேர்க்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tasty hotel style coconut chutney tamil news

Next Story
பிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ்  ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ!Pandian Stores Sheela last day shoot Viral Video Hema Youtube
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com