ஆரோக்கியம் நிறைந்த, அதேநேரம் டேஸ்டியான வாழைப்பூ 65 எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
வாழையில் உள்ள பூ, காய், பழம் முதல் தண்டு வரை அனைத்தும் உண்ணக்கூடியவை, மருத்துவக் குணம் நிறைந்தவை. ஆனால் வாழைப்பூ சமைக்கும் செயல்முறை சற்று கடினமானது. மேலும் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். ஆனால் வாழைப்பூவில் சுவையான வாழைப்பூ 65 செய்து கொடுத்தால், குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
டேஸ்டியான வாழைப்பூ 65 செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை குறித்து கோவை கசின்ஸ் யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டுள்ளது. அதன்படி,
தேவையான பொருட்கள்
வாழைப்பூ – 1 கைப்பிடி
கார்ன் ஃப்ளோர் மாவு – ½ கப்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
வரமிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
சீரகத் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளோர் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, கரம் மசாலா, வரமிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய், தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது,, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் வாழைப்பூவை தனியாக பிரித்து எடுத்து, நன்றாக கழுவி ஒரு கைப்பிடி அளவுக்கு, அந்த மாவில் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்த உடன் வாழைப்பூவை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் கிரிஸ்பியான வாழைப்பூ 65 ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“