அதிரடி டிஸ்கவுன்டை அறிவித்த டாட்டா ஸ்கை – செகண்டரி கனக்சன் உங்களிடம் இருக்கிறதா ?

TataSky Secondary Connection: டாடா ஸ்கையின்  ஒவ்வொரு ப்ரைமரி இணைப்பிலும் அதிகபட்சம் மூன்று செகண்டரி கனக்சன்  செட் டாப் பெட்டிகளை அனுமதிக்கிறது.

By: September 16, 2019, 3:38:53 PM

ஒரே வீட்டில் பல தொலைக்காட்சிகளைக் கொண்ட வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் டாடா ஸ்கை தற்போது புது அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு செகண்டரி கனக்சன் செட்-டாப்-பாக்ஸை வாங்கும் போதும் ரூ .300 தள்ளுபடி அளிக்கிறது டாட்டா ஸ்கை. உதரணாமாக, நீங்கள் வாங்கும் முதல் செட் டாப் பாக்ஸின் விலை  ரூ .1,499 என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இன்னும் ஒரு டிவி இருக்குமானால், நீங்கள் டாட்டா ஸ்கை செகண்டரி கனக்சன் கொடுக்கலாம். இப்போது நீங்கள் வாங்க விருக்கும்  செகண்டரி கனக்சனின் விலையில் ரூ. 300 தள்ளுபடி செய்யப்படும்.

மொத்தத்தில் டாடா ஸ்கையின்  ஒவ்வொரு ப்ரைமரி இணைப்பிலும் அதிகபட்சம் மூன்று செகண்டரி கனக்சன்  செட் டாப் பெட்டிகளை அனுமதிக்கிறது, இதனால் வாடிக்கையாளர்கள் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது செட் டாப் பாக்ஸில் ரூ .300 தள்ளுபடியைப் பெறலாம். இது மொத்தம் ரூ .900 தள்ளுபடிக்கு வழிவகுக்கும்.

டாடா ஸ்கை சமிபத்தில் “ரூம் டிவி சர்வீஸ்” என்ற புதிய திட்டத்தை அறிவித்திருந்தது. சேனல்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதற்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது .

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Tata sky secondary connection 300 discount for tatasky secondary connection hd tatasky settop service for tata dth customers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X