Advertisment

சம்பளதாரர்களுக்கு ஐந்து சிறப்பான வரி சேமிப்பு தேர்வுகள்

Tax saving plans : சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர் வரி சேமிப்புக்கான முதலீடுகளை கவனமாக தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tax saving, plans, elss, ppf, epf, nps, tax saving options for salaried 2019-20,

tax saving, plans, elss, ppf, epf, nps, tax saving options for salaried 2019-20,

சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர் வரி சேமிப்புக்கான முதலீடுகளை கவனமாக தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

Advertisment

ஐந்து பிரபலமான வரி சேமிப்பு முதலீடுகள் உள்ளன அவை ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employee provident fund- EPF), பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund- PPF), வரி சேமிப்பு பரஸ்பர நிதி முதலீடு (Tax saving mutual funds – ELSS), தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System NPS), வரி சேமிப்பு வங்கி நிரந்தர வைப்பு நிதி (Tax saving bank fixed deposit).

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்த வரி சேமிப்பு முதலீடுகளின் முக்கியமான சிறப்பம்சங்கள்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employee provident fund- EPF) பிஎப்

ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான 2018-19 ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.65 சதவிகிதம். இதில் பங்களிப்பு செய்வது வரி சலுகைகளை பெற உதவும். ஒரு ஊழியராக ஒருவரால் பிஎப் பங்களிப்பை அடிப்படை சம்பளத்திலிருந்து 100 சதவிகிதமாக அதிகரிக்க முடியும்.

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund- PPF) பிபிஎப்

பிபிஎப் கணக்கை குறைந்தது ரூபாய் 500/- செலுத்தி திரக்கலாம் அதிகபட்சமாக ரூபாய் 1.5 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் முதலீடு செய்யலாம். தற்போது 2020 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் பிபிஎப்’ ற்கான வட்டி விகிதம் 7.9 சதவிகிதம்.

வரி சேமிப்பு பரஸ்பர நிதி முதலீடு (Tax saving mutual funds – ELSS) இஎல்எஸ்எஸ்

இஎல்எஸ்எஸ் என்பது வரி சேமிப்புக்கான பரஸ்பர நிதி திட்டம் இது அனைத்து பரஸ்பர நிதி அமைப்புகளிலும் கிடைக்கும். குறைந்த கால லாக்-இன் பீரியடான மூன்று வருடங்கள் உள்ள ஒரே வரி சேமிப்பு திட்டம் இஎல்எஸ்எஸ் மட்டும் தான்.

தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System NPS) என்பிஎஸ்

என்பிஎஸ் என்பது ஓய்வூதியத்தை மையமாக கொண்ட திட்டம். இதன் முதிர்ச்சி வயது 60. பிரிவு 80 CCD (1) ன் படி வரிச்சலுகை இத்திட்டத்தில் உண்டு.

வரி சேமிப்பு வங்கி நிரந்தர வைப்பு நிதி (Tax saving bank fixed deposit) எப்டி

வரி சேமிப்புக்கான நிரந்தர வைப்பு நிதி வங்கிகளில் ஒரு நிலையான வட்டி விகிதத்தில் கிடைக்கும். இதன் வட்டி விகிதம் வங்கிகள் வழங்கும் 5 வருட நிரந்தர வைப்பு தொகைக்கு வழங்குவது போன்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Income Tax
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment