மெது மெது டீ பன் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மைதா- 1/2 கிலோ
சர்க்கரை- 1 ஸ்பூன்
உப்பு- சிறிதளவு
முட்டை- 1
பால்-200 கிராம்
ஈஸ்ட்- 1/2 ஸ்பூன்
வெண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் முதலில் ஈஸ்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கரைக்கவும். பின்னர் ஒரு முட்டையை அதில் சேர்த்து அடித்து கலக்கவும்.
அடுத்து பால், மைதா மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் மூடிபோட்டு ஊற வைக்க வேண்டும். பின்னர் திறந்து பார்த்தால் பிசைந்து வைத்த மாவுக்கலவை உப்பலாக இருக்கும். இந்த . இந்த மாவுக்கலவையை மீண்டும் ஒருமுறை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாவு உருண்டைகளை ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் வரிசையாக அடுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு அடி கனமாக பாத்திரம் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும்.
10 நிமிடம் கழித்து நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பன் உருண்டைகளை எடுத்து அதனுள் வைத்து பாத்திரத்தை மூடி போட்டு மூடி வைக்கவும். 20 நிமிடம் போல் வேக விடவும். பின்னர் எடுத்தால் மெது மெது டீ பன் தயார். தட்டில் இருந்து எடுத்து அதன் மேல் வெண்ணெய் தடவி சூடு ஆறியதும் பரிமாறலாம். சுவையாக இருக்கும்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“