என்னதான் ஆசிட் பினாயில் எல்லாம் ஊத்தி கழுவுனாலும் பாத்ரூம் அழுக்கு போகவே போகாது. அந்த அழுக்கெல்லாம் அங்கங்க தேங்கி திட்டு திட்டா தெரிய ஆரம்பிக்கும். ஆனால் இரண்டே டிப்ஸ்ல ரொம்ப ஈசியா காசை மிச்சம் புடிச்சு ஈஸியா கிளீன் பண்ணிடலாம். நளினி மணி சி கே குக்கிங் யூடியூப் பக்கத்துல பாத்ரூம் கிளீன் பண்ண ஒரு ஈஸியான டிப்ஸ் கொடுத்திருக்காங்க அதை எப்படி பண்றதுன்னு பாப்போம்.
Advertisment
நாம் வசிக்கும் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்தால் நிறைய நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். குறிப்பாக, வீட்டில் இருக்கும் பாத்ரூமை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பலர் வீடுகளில் இருக்கும் பாத்ரூம் டைல்ஸ்களில் உப்புக் கறை அதிகப்படியாக படிந்து காணப்படும். இதனை போக்குவதற்கு நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களை பயன்படுத்தி ஒரு கலவையை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
டீ தூள் வினிகர் சேம்பு பேக்கிங் சோடா
செய்முறை
ஒரு பாத்திரம் வச்சு தண்ணி ஊத்தி அதுல டீ தூள் சேர்த்து நல்லா கொதிக்க வைக்கனும். அதுக்கு பிறகு அந்த டிக்காஷன் வடிகட்டி எடுத்து அதோட பேக்கிங் சோடா ஒரு, பாக்கெட் ஷாம்பு சேர்த்து கலந்து அதில் வினிகரும் சேர்த்து கலந்துவிடவும்.
பின்னர் இதை பாத்ரூம்ல ஊத்திவிட்டு சுத்தம் பண்ணாலே போது பாத்ரூம் சீக்கிரம் சுத்தம் ஆயிடும். இது பாத்ரூம், சிங்குக்கு,பைப் இது எல்லா இடத்திலும் சுத்தம் பண்ண பயன்படுத்தலாம். ரொம்ப கிளீனா அந்த உப்பு கரை எதுவுமே இல்லாம சுத்தமாயிடும்.
டிப்ஸ் 2: சிறிய கின்னத்தில் தலைக்கு தேய்த்து குளிக்கக் கூடிய ஏதேனும் ஒரு சீயக்காய்த்தூளை சிறிதளவு கொட்டி அதனுடன் ஒரு பாக்கெட் ஷாம்பு சேர்த்து, புளிக்க வைத்த தயிர், தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ண வேண்டும். இதை பாத்ரூம் டைல்ஸ்ல ஊற்றி தேய்த்து விட்டாலே கரை போய்விடும்.
இதில் நாம் உபயோகப்படுத்தி இருக்கும் பொருட்களே பாத்ரூம் டைல்ஸ்களில் இருக்கும் உப்புக் கறை, அழுக்குகளை அகற்ற போதுமானதாக இருக்கும்.
இந்த தண்ணீரை பயன்படுத்தி அடுப்பின் மேற்பகுதியையும் சுத்தப்படுத்தலாம். இதற்காக பணம் செலவளித்து தனியாக சோப்பு வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை கொண்டு நமக்கு தேவையானவற்றை செய்து கொள்ள முடியும்.