/indian-express-tamil/media/media_files/2025/09/20/istockphoto-114452963-612x612-1-2025-09-20-17-33-26.jpg)
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தினமும் காலை உணவில் டீ மற்றும் காபி போன்ற பானங்களை அடிக்கடி சேர்க்கிறார்கள். மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும், உடலை உற்சாகமாக்கவும் இந்த இரண்டு பானங்களும் தனித்துவமான சக்தியையும் சுவையையும் வழங்குகின்றன. இதன் ஆரோக்கிய நன்மைகளும் மக்களின் விருப்பத்திற்கு காரணமாக உள்ளது. ஆனால், ஆற்றல் அளவு, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து சிறந்த பானம் எது என்பதற்கான கேள்வி பலரின் மனதில் இருக்கும்.
காஃபின் உள்ளடக்கம் மற்றும் ஆற்றல்
காஃபின் அளவு மற்றும் ஆற்றல் தரத்தில்: ஒரு கப் காபியில் சுமார் 80-100 மி.கி. காஃபின் இருக்கும், இது உடனடி விழிப்புணர்வை அதிகரிக்க கூடிய சக்திவாய்ந்த தூண்டுதலாக செயல்படுகிறது. எனினும், இது திடீர் நடுக்கம், மனஅமைதி குறைவு, பதட்டம் மற்றும் ஆற்றல் வீழ்ச்சியை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
டீவில் காஃபின் அளவு சுமார் 30-50 மி.கி. மட்டுமே இருக்கும், இது மென்மையான மற்றும் நீண்டகால விழிப்புணர்வை வழங்குகிறது. மேலும், டீயில் உள்ள எல்-தியானைன் என்ற பொருள் மனஅமைதியும் கவனமும் மேம்படுத்த உதவுகிறது. ஆகவே, திடீர் கவனம் தேவைப்படும் நேரங்களில் காபி சிறந்த தேர்வாக இருக்கும்போது, நிலையான மற்றும் மென்மையான ஆற்றல் விரும்புபவர்களுக்கு டீ சிறந்தது..
ஆரோக்கிய நன்மைகள்:
டீ: கிரீன் டீ மற்றும் பிளாக் டீ போன்ற டீ வகைகள் ஆக்ஸிஜனேற்றிகளில் நிறைந்தவை. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமானத்தைச் சீராக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
காபி: காபி மூளை, கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் சில நோய்கள் அபாயத்தை குறைக்கும் பணியில் உதவுகிறது, ஆனால் டீ இதயத்தையும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதுகாக்க சிறந்தது.
அபாயங்கள்
அதிக அளவில் காபி சாப்பிடுவது பதட்டம், தூக்கமின்மை மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகள் உருவாக்கக்கூடும். அதேபோல், டீ காபிக்கு மிதமானதாக இருந்தாலும், அதிகமாக பிளாக் டீ குடிப்பது தூக்கத்தை பாதிக்க வாய்ப்பு உள்ளது மற்றும் இரும்பு உறிஞ்சுதலையும் குறைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இரண்டும் நீரிழப்பான தன்மையைக் கொண்டதால், அதிகமாக உட்கொள்ளும் போது நீர் இழப்பு ஏற்படக்கூடும். எனவே, அளவை கட்டுப்படுத்துவது அவசியம்.
வாழ்க்கை முறையும் கலாச்சாரமும்: காபி மேற்கத்திய கஃபே கலாச்சாரத்தில் வேகமான தொடக்கமும், உற்பத்தித்திறனும், சமூக கலந்துரையாடல்களும் குறிக்கும் பானமாக கருதப்படுகிறது. அதேபோல், ஆசிய நாடுகளில் டீ விருந்தோம்பல், சமநிலை மற்றும் அமைதியான வாழ்க்கை முறையின் பிரதிநிதியாகும்.
பலருக்கு காலை காபி உடல் மற்றும் மனத்தை உற்சாகப்படுத்த ஒரு நல்ல தொடக்கம், மாலை டீ மன அமைதி மற்றும் ஓய்வை அளிக்கும். இதனால் பலர் காலை காபி, மாலை டீ என்ற முறையில் இரண்டையும் வாழ்க்கையில் சேர்க்கிறார்கள். காபி வேகமான ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை உதவுகிறது; டீ அமைதியான விழிப்புணர்வையும் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. எனவே, எது சிறந்தது என்பது தனிப்பட்ட உடல்நிலை, வாழ்க்கை முறை மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் மாறுபடும்.
மிதமான அளவில் பயன்படுத்தினால், இரண்டும் ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் மேம்படுத்தும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.