Happy Teddy Day 2019 Importance: காதலர் தின கொண்டாட்ட வாரத்தின் நான்காம் நாளான நாளை (ஜன.10) 'டெடி தினம்' (Teddy Day) கொண்டாடப்படுகிறது.
காதலர் தினம் கொண்டாட்ட வாரத்தில் இன்று மூன்றாவது நாள். முதல் நாள் ரோஸ் டே, இரண்டாவது நாள் புரபோஸ் டே, மூன்றாவது நாள் சாக்லேட் டே, நான்காவது நாள் டெடி டே, ஐந்தாவது நாள் பிராமிஸ் டே, ஆறாவது நாள் ஹக் டே, ஏழாம் மற்றும் இறுதி நாளில் கிஸ் டே என்று முடிகிறது காதலர் தின வாரம்!.
இந்நிலையில், நாளை டெடி டே-வை முன்னிட்டு, உங்கள் ஜோடிக்கு என்னென்ன நிறத்தில் டெடி பரிசளிக்கலாம், நீங்கள் பெறும் டெடியின் நிறத்திற்கும் என்னென்ன அர்த்தம்? என்று இங்கே பார்ப்போம்.
பிங்க் டெடி:
பிங்க் நிற டெடி வழங்கினால், நீங்கள் உங்கள் ஜோடியை ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம்!.
சிகப்பு டெடி:
பேரார்வம், இரக்கம், ஆசை மற்றும் அன்பு ஆகியவற்றை சிகப்பு நிறம் பிரதிபலிக்கிறது. இருவருக்கிடையேயான உணர்ச்சிகளின் தீவிரத்தை இது உணர்த்துகிறது. ஆகையால், உங்கள் காதலை வெளிப்படுத்த சிகப்பு நிற டெடியை வழங்குங்கள்.
மேலும் படிக்க - Propose Day 2019: அன்புக்குரியோரை ’அட்ராக்ட்’ செய்வதற்கான செய்திகள்!
ஆரஞ்சு டெடி:
மகிழ்ச்சி, கொண்டாட்டம், வெளிச்சம், ஆர்வம் மற்றும் பேரார்வம் போன்றவற்றை ஆரஞ்சு நிறம் வெளிப்படுத்துகிறது. ஆகவே, யாராவது உங்களுக்கு ஆரஞ்சு நிற டெடி பரிசளித்தால், விரைவில் உங்களுக்கு ஒரு லவ் புரபோஸ் வரப் போகிறது என்று அர்த்தம்!.
வெள்ளை டெடி:
வெள்ளை டெடி என்றால் ஏற்கனவே கமிட்டட் என்று அர்த்தம். எந்தப் பெண்ணாவது உங்களுக்கு வெள்ளை டெடி கொடுத்தால், அவர் ஏற்கனவே கமிட்டட் என்றும், அவரை முயற்சி செய்வதில் பயனில்லை என்றும் அர்த்தம். அடுத்த முறை வெற்றிப் பெற வாழ்த்துகள்.

பிரவுன் டெடி:
நீங்கள் விரும்புபவர் உங்களுக்கு பிரவுன் நிற டெடி அளித்தால், நீங்கள் அவரின் இதயத்தை காயப்படுத்தி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பிரச்சனைக்கு தீர்வு காண்பது நல்லது.
ப்ளூ டெடி:
வானத்தையும், கடலையும் இணைக்கும் நிறம் இது. உங்கள் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் நிறம் இது. ஆகவே, நீல நிற டெடி பெற்றால், உங்கள் மீது அவர் ஆழமான காதல் வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.