மரியானா பாஸ்கல், ஆயிரக்கணக்கான தென்கிழக்கு ஆசியர்கள் ஆங்கிலம் கற்கவும் நம்பிக்கையுடன் பேசவும் உதவியுள்ளார். ஒரு TEDx வீடியோவில், புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கும், நம்பிக்கையுடன் தெளிவாகப் பேசுவதற்கும் சில குறிப்புகள் மற்றும் தந்திரங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
ஒருவர் எவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேசுகிறார் என்பது அவர்களின் ஆங்கில நிலைக்கு மிகக் குறைவாகவே உள்ளது, மேலும் அது ஆங்கிலத்தைப் பற்றிய அவர்களின் அணுகுமுறையுடன் நிறைய தொடர்புடையது, என்று அவர் கூறினார்.
தன் மகள் பியானோ வாசிப்பதை எப்படி வெறுக்கிறாள் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுத்து அவர் தன் கருத்தை விளக்கினார்.
பியானோவில் அவளுடைய வெற்றி, அவள் எவ்வளவு தவறுகளைச் செய்தாள் என்பதன் மூலம் மதிப்பிடப்பட்டது, அதனால் அவள் பியானோ வகுப்புக்குச் செல்ல பயந்தாள். ஆங்கிலம் கற்பதை வெறுக்கும் மலேசியர்களின் அதே சித்தாந்தத்தை நான் கவனித்தேன்.
இது சுய உருவத்தைப் பற்றியது. நல்ல ஆங்கிலம் எப்படி இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும், அப்படி தங்களால் இயலாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவே, அவர்களுக்கு உதவுவதற்கான திறவுகோலை அவர் எப்படிக் கண்டுபிடித்தார்?
ஒரு சைபர் கஃபே பயணத்தில் தான் இது நிகழ்ந்தது. சைபர் கஃபேக்கள் மோசமானவை. அது சத்தமான, வன்முறை வீடியோ கேம்களை விளையாடும் சிறுவர்களால் நிரம்பியது. ஆனால் நான் அங்கு செல்ல வேண்டியிருந்தது. நான் அங்கு சென்று உட்கார்ந்தேன், எனக்கு அடுத்துள்ள பையன் என்ன செய்கிறான் என்று ஆர்வத்துடன் பாத்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு அதில் மிகவும் திறமை இல்லை, அது ஒரு ஷூட்டிங் கேம் மற்றும் நிறைய ஷூட்டிங் இருந்தது.
அவன் விளையாடுவதை அவனது நண்பர்கள் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். ஆனால், அவனுக்கு எந்த சங்கடமும் இல்லை, கூச்சமும் இல்லை.. அவன் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தினான்.
அப்போதுதான் அவள் உணர்ந்தாள்: அது அவனின் மனப்பான்மை. அதாவது ஆங்கிலத்தில் ஆட்டிடியூட். சிறப்பாக செயல்படும் நபர் மொழியிலும், அவர்கள் பேசும் நபரின் மீதும் கவனம் செலுத்துகிறார்.
பிறகு பாஸ்கல், ஒரு மருந்தகத்திற்கு சென்றபோது அங்கு நடந்த இரண்டு வகையான உரையாடல்களை குறித்து பேசினார்.
ஒருவர் அதைச் சரியாகப் பெறுவது பற்றி கவலைப்படுகிறார், மேலும் ஒருவர் பேசும் நபரின் மீது முழு கவனம் செலுத்தினார். இது தேர்ச்சி பெறுவதற்கான ஒரு கலை அல்ல - இது ஒரு கணினி விளையாட்டைப் போல விளையாடுவதற்கான ஒரு கருவியாகும், என்று அவர் கூறினார்.
ஆங்கிலம் இன்னும் ஒரு கலையாக கற்பிக்கப்படுகிறது, ஒரு கருவியாக இல்லை. இது தேர்ச்சி பெற வேண்டிய கலை அல்ல. இது ஒரு முடிவைப் பெறுவதற்கான ஒரு கருவி. அந்த கருவி உங்களுக்கு சொந்தமானது, என்று அவர் மேலும் கூறினார்.
எனவே நீங்கள் பேசும்போது, உங்கள் மீது கவனம் செலுத்தாதீர்கள். மற்ற நபரின் மீதும், நீங்கள் அடைய விரும்பும் இலக்கின் மீதும் கவனம் செலுத்துங்கள், என்று அவள் முடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“