மீண்டும் கறைகள் படிய ஆரம்பித்துவிடும். தொடர்ந்து பிளீச்சிங் செய்வதால் பற்கள் சேதமடையவும் வாய்ப்புள்ளது. இதோ, பக்கவிளைவுகள் இல்லாத இயற்கையான முறையில் பற்களை பளபளவென மாற்றும் ஒரு எளிய வழி.
மீண்டும் கறைகள் படிய ஆரம்பித்துவிடும். தொடர்ந்து பிளீச்சிங் செய்வதால் பற்கள் சேதமடையவும் வாய்ப்புள்ளது. இதோ, பக்கவிளைவுகள் இல்லாத இயற்கையான முறையில் பற்களை பளபளவென மாற்றும் ஒரு எளிய வழி.
Teeth whitening badly breathe natural home remedies
நம் முகத்திற்கு எவ்வளவு மேக்கப் போட்டாலும், பற்கள் கறை படிந்தோ அல்லது கருமையாக இருந்தாலோ நம்மால் மனதார சிரிக்க முடியாது. பற்களில் மஞ்சள் கறை படிந்திருந்தால், பலரும் பல் மருத்துவரிடம் சென்று பிளீச்சிங் செய்வார்கள். ஆனால், இந்த பிளீச்சிங் கூட நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை. மீண்டும் கறைகள் படிய ஆரம்பித்துவிடும். தொடர்ந்து பிளீச்சிங் செய்வதால் பற்கள் சேதமடையவும் வாய்ப்புள்ளது. இதோ, பக்கவிளைவுகள் இல்லாத இயற்கையான முறையில் பற்களை பளபளவென மாற்றும் ஒரு எளிய வழி.
Advertisment
தேவையான பொருட்கள்:
வாழைப்பழத் தோலின் உள் பகுதி (வெள்ளை நூல் போன்ற பகுதி) உப்பு - கால் ஸ்பூன் ஈனோ - கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 4-5 துளிகள் பல் துலக்கும் பேஸ்ட் - கால் ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
Advertisment
Advertisements
ஒரு வாழைப்பழத்தின் தோலை உரித்து, அதன் உள் தோலில் இருக்கும் வெள்ளை நூல் போன்ற பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு வழித்து எடுக்கவும். இதில் ஏராளமான என்சைம்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்க்கவும். அடுத்து, ஈனோ பாக்கெட்டை திறந்து கால் ஸ்பூன் அளவு மட்டும் சேர்க்கவும். பிறகு, ஒரு எலுமிச்சைப் பழத்தில் ஒரு சிறிய ஓட்டை போட்டு, 4-5 துளிகள் சாறு மட்டும் விடவும் (வைட்டமின் சி நிறைந்துள்ளதால்). இறுதியாக, நீங்கள் தினமும் பயன்படுத்தும் பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து கால் ஸ்பூன் சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தினமும் பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷில் இந்த கலவையை எடுத்து, பற்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என நன்றாகத் தேய்க்கவும். ஒரே நாளில் கறை போகவில்லை என்றால், இந்தக் கலவையை பிரிட்ஜில் சேமித்து வைத்து இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம். காலை ஒரு முறையும், இரவு ஒரு முறையும் பயன்படுத்தினால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும். மிதமான கறைகள் ஒரு முறை பயன்படுத்தினாலே போய்விடும், ஆனால் நீண்ட நாட்களாக படிந்திருக்கும் கறைகளுக்கு இரண்டு நாட்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருக்கும்.