பலர் பற்களை வெண்மையாக்க அதிக பணம் செலவழிக்கும் நிலையில், சமூக ஊடகப் பிரபலம் ஆர்மென் ஆடம்ஜான் உங்கள் பற்களில் உள்ள கிருமிகளை அழித்து, வெண்மையாக்கும் ஒரு சூப்பர் எளிய வழியைப் பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள்:
சில துண்டுகள் கிவி
சிறிது வெள்ளரி
ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா
செய்முறை:
கிவி, வெள்ளரி மற்றும் பேக்கிங் சோடாவை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி பல் துலக்குங்கள்.
விரைவில் உங்கள் பற்களில் உள்ள மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
ஆர்மென் ஆடம்ஜான் கூறுகையில், "கிவியில் கால்சியம் அதிகம் உள்ளது. வெள்ளரி உங்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி, பற்களை வெண்மையாக்க உதவுகிறது. இயற்கையான பொருட்கள் இருக்கும்போது பற்களை வெண்மையாக்க ஏன் அதிக பணம் செலவழிக்க வேண்டும்? வெள்ளரி மற்றும் கிவி சுவையானது மட்டுமல்ல, உங்கள் வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது" என்றார்.