ஒவ்வொருவரும் விரும்பும் புன்னகைக்கு, பளிச்சென்ற பற்கள் அவசியம். ஆனால், நம் அன்றாட பழக்கவழக்கங்கள் பற்களின் நிறத்தை மாற்றி, மஞ்சள் கறைகளை உண்டாக்குகின்றன. இந்த வீடியோவில், பற்களின் நிறத்தை வெண்மையாக்கி, மஞ்சள் கறைகளை நீக்கும் எளிய இயற்கை வழிமுறைகளைப் பற்றிப் பேசுகிறார் டாக்டர் விவேக் ஜோஷி.
பற்களின் ஆரோக்கியத்திற்கு முதல் படி, ரசாயனம் நிறைந்த டூத்பேட்ஸ்களை தவிர்ப்பதுதான். நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டூத்பேஸ்டில் உள்ள ரசாயனங்கள், பற்களின் இயற்கையான வெண்மையைச் சேதப்படுத்தி, காலப்போக்கில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, இயன்றவரை இயற்கை மூலப்பொருட்களால் ஆன டூத்பேஸ்ட் பயன்படுத்துவது நல்லது.
Advertisment
மஞ்சள், உப்பு, எண்ணெய்
ஒரு கிண்ணத்தில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் சேர்க்கவும். பின்னர், ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை ஹிமாலயன் பிங்க் சால்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதைக் கொண்டு தினமும் பல் துலக்கி வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் இயற்கையாகவே வெண்மையாகும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற மூலப்பொருள், கிருமிகளை அழித்து, பற்களைப் பாதுகாக்கும்.
Advertisment
Advertisements
வெந்தயப் பொடி மற்றும் உணவுப் பழக்கங்கள்
வெந்தயப் பொடியை பற்பசையாகப் பயன்படுத்தலாம். இது பற்களை சுத்தப்படுத்தவும், கறைகளை நீக்கவும் உதவும். அதே சமயம், காபி, டீ மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொள்வது அவசியம். இந்த உணவுகள் பற்களில் கறைகளை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள். இவற்றைக் குறைப்பதோடு, சரியான இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றினால், நிச்சயம் பற்கள் வெண்மையாகி, உங்கள் புன்னகை மேலும் பிரகாசிக்கும்.