விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் தமிழரசியாக நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை தேஜஸ்வினி கவுடா. இப்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் வித்யா நம்பர் 1 சீரியலில் நடித்து வருகிறார்.
தேஜஸ்வினி, கோயிலம்மா என்ற தெலுங்கு சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து பிலி ஹெந்தி, வேணா பொன்னப்பா, மற்றும் கேர் ஆஃப் அனசூயா. போன்ற பல தெலுங்கு சீரியல்களில் நடித்தார்.
இவருக்கும் பிரபல கன்னட சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் அமர்தீப் சௌத்ரிக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
ஏற்கெனவே இப்போது தமிழ் சின்னத்திரையில், திருமணம் ஆன சில மாதங்களிலே ஒரு இளம் ஜோடி பிரிந்தது பேசு பொருளாகியது.
ஆனால், தேஜஸ்வினி இதற்கு பதிலளிக்கும் வகையில், தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார், அதில் ‘இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, அது நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்’ என்று குறிப்பிட்டு தன் கணவரை டேக் செய்துள்ளார்.
இதன்மூலம் இந்த வதந்திகளுக்கு தேஜஸ்வினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“