சப்ப மூக்கி, பிராமணர், குடி பழக்கம் – நீலிமா ராணியின் அதிரடி பதில்கள்

Television actress Neelima Rani Youtube Channel நான் மதவாதி அல்ல. ஆன்மீகவாதி மட்டுமே.

Television actress Neelima Rani Youtube Channel Tamil News
Television actress Neelima Rani Youtube Channel Tamil News

Television actress Neelima Rani Youtube Channel Tamil News : 2000-களில் சின்னதிரை ராணியாக வலம்வந்தவர் நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், ஆசை, மெட்டி ஒளி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர் பட்டாளத்தை தன் வசமாகியவர். தற்போது, தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அதில் சமீபத்தில், அவருடைய வெவ்வேறு விடியோக்களுக்கு கமென்ட் செய்த மக்களுக்கு பதில் கூறும் வகையில் காணொளி ஒன்றை உருவாக்கி அப்லோட் செய்தார். அவர் எடுத்துக்கொண்ட கமென்ட்டும் அதற்கு பதில் அளித்த விதமும் வேற லெவல். “என்னைக் கேள்வி கேட்ட உங்க எல்லோருக்கும் இன்று நான் கேள்வி கேட்க போகிறேன்” என்று தொடங்கிய அவருக்கு வந்த முதல் கமென்ட், “நம்மள மட்டும் டிவி பார்க்க வைக்குறாங்க. ஆனால், நீலிமா வீட்டுல டிவி இல்லை. என்ன அநியாயம் இது?” என்பதுதான்.

அதற்கு, “சிலர் பொழுதுபோக்குக்காக டிவி பார்ப்பார்கள். சிலர் உபயோகமான விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்காகப் பார்ப்பார்கள். நான் என்னுடைய நேரத்தைப் புத்தகம் படிப்பதில் செலவிடுகிறேன். என்னுடைய வீட்டில் 12 பேர் இருக்கிறோம். அனைவரையும் ஒரு டிவி முன்பு கட்டிப்போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான் டிவி இல்லை” என்றார்.

அடுத்ததாக, “என்னடி பண்ணுற இங்க உட்கார்ந்துகிட்டு?” என்று ஒருவர் தாறுமாறாக கமென்ட் செய்திருந்தார். அதற்கு, “என்னை ‘டி’ போட்டு பேசுற அளவுக்கு உங்களை எனக்குத் தெரியாது. மரியாதை கொடுப்பது நம் தமிழர் பண்பாடுகளில் ஒன்று. அதனால் அதனைப் பின்பற்றுவது சிறந்தது. உங்கள் வீட்டிலும் இதுபோன்று யாரையும் கூப்பிடாதீர்கள். அன்போடு இப்படி சொல்வது வேறு. உங்களை என்னால் தொடர்புகொள்ள முடியாது என்கிற தைரியத்தில் இப்படியெல்லாம் செய்யலாமா?” என்று பதிலளித்தார்.

“சப்ப மூக்கி” என்று செய்திருந்த கமென்ட்டை படித்துவிட்டு, “நான் சப்ப மூக்கிதான். என்ன பண்ணுறது? என் பொறப்பு இப்படி ஆகிடுச்சு. ஆனால், இந்த சப்ப மூக்கை வைத்துக்கொண்டே நான் இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கேன். அதற்காக என்னுடைய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய நன்றி” என்று மிகவும் கூலாக பதிலளித்தார்.

“நீங்க குடிப்பீங்களா?” என்ற கமென்ட்டிற்கு, “கண்டிப்பா. நிறைய தண்ணீர், ஜூஸ் குடிப்பேன். மேலும், குடிப்பது என்பது தனிப்பட்ட விஷயம். அதை பற்றி பொதுவெளியில் கேட்க கூடாது. சோஷியல் ட்ரிங்க் வேறு. ஆனால், குடி நிச்சயம் குடும்பத்தைக் கெடுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது” என்றார்.

“நீங்கள் பிராமனாரா?” என்றதற்கு, “நான் மதவாதி அல்ல. ஆன்மீகவாதி மட்டுமே. என்னுடைய அப்பா அம்மா பிராமணர்கள். ஆனால், நான் ரமலான் நோன்பு முதல் கிறிஸ்துமஸ்க்கு சர்ச் வரை எல்லா வழிபாடுகளையும் பின்பற்றுவேன். என் பெற்றோர்கள் உட்பட நாங்க யாரும் ஜாதி, மதம் சார்ந்த விஷயங்களை ஆதரித்ததில்லை” என்று விளக்கமளித்தார் நீலிமா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Television actress neelima rani youtube channel tamil news

Next Story
மண்சட்டியில் செஞ்ச இறா தொக்கு; இந்த டேஸ்ட்டுக்கு ஈடே இல்ல!Dry Prawns Thokku in tamil: Kooni Meen Thokku village style in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X