ஒரு முறை வெங்கடேஷ் பட் சொல்வது போல கோவில் புளியோதரை செய்யவும்.
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் மிளகு
2 ஸ்பூன் கருப்பு எள்ளு
2 ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் வெந்தயம்
100 எம்.எல் நல்லெண்ணை
4 வத்தல்
1 ஸ்பூன் கடலை பருப்பு
1 கைபிடி வேர்கடலை
100 கிராம் புளி
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
2 ஸ்பூன் மிளகாய் தூள்
200 எம்.எல் தண்ணீர்
1 ½ கப் வேக வைத்த சாதம்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் மிளகு சேர்த்து நன்றாக வறுக்கவும். நன்றாக வறுபட்டதும் தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து இதுபோல கடுகு, எள்ளு, வெந்தயத்தை ஆகியவற்றை தனியாக வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் பொடியாக அரைத்துகொள்ளவும். ஒரு நல்லெண்ணை சேர்த்து , வத்தல், கடலை பருப்பு , வேர்கடலையை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். நிறம் மாறியதும் புளி கரைத்தது சேர்க்கவும். தொடர்ந்து இதில் மஞ்சள் பொடி, மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும், தொடர்ந்து உப்பு சேர்க்கவும். தொடர்ந்து பெருங்காயத்தூள் சேர்க்கவும். அரைத்த வைத்திருந்த பொடியை 3 ஸ்பூன் சேர்க்கவும். தொடர்ந்து இதில் நாம் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளரவும்.