இந்த இளநீர் அல்வா செய்வது ரொம்ப ஈசி. ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
இளநீர் 2
சர்க்கரை 300 கிராம்
கான்பிளவர் மாவு 100 கிராம்
நெய் 4 ஸ்பூன்
ஏலக்காய் தூள் ¼ டேபிள் ஸ்பூன்
3 இளநீர் வழுக்கை நறுக்கியது 1 கப்
செய்முறை: ஒரு பாத்திரத்தில், கான்பிளர் சேர்க்கவும், எடுத்துவைத்த இளநீரை ஊற்றவும். நன்றாக இதை அடித்துக்கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீ, சர்க்கரை சேர்த்து கொதிக்க வைகக்வும். தொடர்ந்து நெய் சேர்க்கவும். தொடர்ந்து கான்பிளவர் கரைசலை சேர்த்து மெதுவாக கிளரவும். தற்போது கெட்டியாகி வரும்போது, மேலும் சர்க்கரை சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து நெய் சேர்க்கவும். எல்லா நெய்யையும் ஒன்றாக சேர்க்காமல். இடைவேளைவிட்டு சேர்த்து கிளரவும். கடைசியாக நறுக்கிய வழுக்கையை சேர்த்து கிளரவும். தொடர்ந்து நெய், ஏலக்காய் பவுடர் சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“