ஜில் ஜில் இளநீர் சர்பத் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இளநீர்- 2
கடல்பாசி (அகர் அகர்)- ஒரு கைப்பிடி
சர்க்கரை- 200 கிராம்
கண்டன்ஸ்டுமில்க்- 3 ஸ்பூன்
பால்- அரை லிட்டர்
சப்ஜா விதை- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் சப்ஜா விதைகளை நீரில் போட்டு ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் இளநீரியை ஊற்றி அதில் கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும். கரையும் அளவிற்கு கலக்கவும். பின்னர் இதனை அப்படியே ஃபிரிட்ஜில் ஒரு மணிநேரம் வைக்க வேண்டும்.
ஒருமணிநேரம் கழித்து எடுத்தால் அது ஜெல்லி மாதிரி ஆகிவிடும். இதனை சிறிது சிறிதாக நறுக்கி எடுக்கவும். இப்போது மற்றொரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை ஊற்ற வேண்டும். பாலில் கண்டன்ஸ்டு மில்க், ஊறவைத்த சப்ஜா விதை, ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள இளநீர் ஜெல்லி, இளநீர் வழுக்கைகளை சிறிது சிறிதாக வெட்டி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் இப்போது இதை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்தால் ஜில் ஜில் இளநீர் சர்பத் ரெடி.