வீ்ட்டில் கரையான் தொல்லை இருந்தால், அதை அகற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும். ஒரு இடத்தில் அழித்தால் மற்றொரு இடத்தில் கரையான் கூடு கட்டுவது ஒரு வீட்டையே பாதிப்புக்குள்ளாக்கும் நிலைக்கு இழுத்துச்செல்லும். வீட்டில் ஈரத்தன்மை இருக்கும் இடங்களில் தான் கரையான அரிப்பு ஏற்படும். வீட்டில் மரம் தொடர்பான பொருட்கள் இருந்தால் கரையான் தொல்லை ஏற்படும் அபாயம் அதிகம்.
குறிப்பாக பழைய மர சாமான்கள் இருந்தால், அதில் கரையான் புற்று உருவாகி, அந்த சாமானை பயன்படுத்த முடியாத நிலையே ஏறபட்டுவிடும். இந்த கரையானிடம் இருந்து விடுபட பல வழிகள் இருக்கிறது. இதில் சில குறிப்பிட்ட வழிகளில் ஒன்று வேப்ப எண்ணெய் பயன்படுத்தி கரையான் அரிப்பை தடுப்பது. சிறிதளர் வேப்ப எண்ணெய்யை ஒரு கொட்டாங்குச்சியில் ஊற்றி, பஞ்சை அந்த எண்ணெயில் தொட்டு, கரையான் அரிப்பு உள்ள இடம், பழைய மரசாமான்களில் தேய்த்துவிடலாம்.
அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில், கற்பூரத்தை உதிர்த்து போட்டு அதில், தேங்காய் எண்ணெய் ஊற்றி, நன்றாக கலக்கி, டூத் ப்ரஷை வைத்து கரையான் உள்ள இடங்களில் தேய்த்துவிடலாம். மர கதவு, கம்போர்டு, மரபீரோ ஆகிய பொருட்களில் இந்த எண்ணெயை தேய்க்கலாம். கிராம்பை 4-5 எடுத்துக்கொண்டு, அதை நன்றாக இடித்து பொடி செய்து, தண்ணீரில் கரைத்து, ஒரு ஸ்ப்ரே பாட்டியிலில் வைத்து கரையான் அரிப்பு உள்ள இடத்தில் தெளித்துவிடலாம். இப்படி செய்யும்போது கரையான் தொல்லை வீட்டில் இருக்காது.
வேப்பிலை பொடி, அல்லது நன்றாக காய்ந்த வேப்பிலையை பொடி செய்து எடுத்துக்கொண்டு, அதை கரையான் தொல்லை இருக்கும் இடங்களில் வைத்துவிட்டால் கரையான் பாதிப்பு நீங்கிவிடும். அதேபோல் கரையான் அரிப்பு, மற்றும் கரையான் புற்று உள்ள இடங்களில், மிளகாய் தூள் போட்டால் கரையான அரிப்பு மற்றும் அதனால் ஏற்படும பாதிப்புகள் இருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“