/indian-express-tamil/media/media_files/2025/05/10/vr8hY9CYe48brTAK91aq.jpg)
இன்றைய சூழலில், சொந்தமாக ஒரு சிறு தோட்டம் அமைப்பது பலருக்கும் விருப்பமாக உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளிலும், இடப்பற்றாக்குறையிலும் வசிப்பவர்களுக்கு மாடித் தோட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; ஆரோக்கியமான உணவு, பசுமையான சூழல் எனப் பல நன்மைகளை நமக்கு அள்ளித் தருகிறது.
மாடித் தோட்டம் அமைப்பதன் மூலம் வீட்டுச் சுற்றியுள்ள வெப்பம் குறைகிறது. செடிகள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதால் காற்று சுத்தமாகிறது. கழிவுப் பொருட்களை உரமாக மாற்றுவதன் மூலம் குப்பைகள் குறைந்து நிலப்பரப்பு பாதுகாக்கப்படுகிறது.
மாடித் தோட்டத்தில் புதிதாக ஈடுபடுபவர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று புஷ்பவனம் குப்புசாமி அறிவுறுத்துகிறார். அந்த வகையில், தொட்டியை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், தொட்டிகளில் செடியை நடுவதற்கு முன்பாக அதன் அடிப்பகுதியில் 5 துவாரங்கள் போட வேண்டும் என்று புஷ்பவனம் குப்புசாமி தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, அந்த துவாரங்கள் மீது மண்பானையின் ஓடுகளை வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், தொட்டியில் ஆற்று மணல் கொண்டு நிரப்ப வேண்டும். குறிப்பாக, நான்கு கைப்பிடி அளவிற்கு ஆற்று மணல் கொண்டு பரப்ப வேண்டும். இதற்கு அடுத்தபடியாக, செடிகள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து செம்மண், எருமை சாணம் ஆகியவை கலந்த கலவையை வாங்கி வந்து தொட்டியில் போட வேண்டும் என்று புஷ்பவனம் குப்புசாமி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொட்டியை தயார் செய்த பின்னர் தான் செடியை நட்டு வளர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். எனவே, மாடித் தோட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றலாம்.
நன்றி - Pasumai Vikatan Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.