/indian-express-tamil/media/media_files/2025/05/10/8honegb5ieYK6OILCO75.jpg)
இன்றைய வேகமான நகர வாழ்க்கையில், மாடித் தோட்டம் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று நிறைய பேருக்கு ஆசை இருக்கும். நமக்கு தேவையான பழங்கள் மற்றும் காய்கறிகளை அறுவடை செய்யலாம் என்பதையும் கடந்து மனதுக்கு நிறைவான மகிழ்ச்சியை மாடித் தோட்டம் கொடுக்கும்.
மாடித் தோட்டத்தை பொறுத்த வரை, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை பெரும்பாலானவர்கள் வளர்ப்பார்கள். இத்தகைய செடிகளை நடும் போது, பெரிய தொட்டியை பயன்படுத்த வேண்டும் என்று தோட்டக் கலை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஏனெனில், அந்த செடிக்கு தேவையான அளவு தொட்டி பெரிதாக இருக்கும் போது தான், அவை சீராக வளரும். இது மட்டுமின்றி இதற்காக சில உரங்களை போட வேண்டும். உரம் என்றதும் விலை உயர்ந்த பல்வேறு செயற்கை உரங்களை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதன்படி, மாட்டுச் சாணம் கலந்த மணல் உரத்தை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை போட்டு வந்தால், செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இவ்வாறு செய்யும் போது எலுமிச்சை செடி அதிகமாக பூக்கத் தொடங்கும்.
இது தவிர எலுமிச்சை செடிக்கு குறைந்தது 6 முதல் 8 மணி நேரமாவது நேரடி சூரிய ஒளி தேவைப்படும். எனவே, வீட்டின் மொட்டை மாடி, பால்கனி அல்லது தோட்டத்தில் நன்கு வெளிச்சம் வரும் இடத்தை தேர்வு செய்து வளர்க்க வேண்டும். மேலும், எலுமிச்சை செடி இருக்கும் தொட்டியின் அடிப்பகுதியில் வடிகால் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நன்றி - Pasumai Thottakalai Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us