தாடி பாலாஜி எனும் நடிகனைச் சுற்றி எத்தனை எத்தனை சர்ச்சைகள், பிரச்சனைகள், திட்டுகள், விவாதங்கள்...! ஆனால், இவை அனைத்தையும் ஒவ்வொரு முறையும் கடந்து வந்து தனது காமெடிகளால் ரசிகர்களை சிரிக்க வைக்கவும் மறந்ததில்லை, தனது அன்றாட பணியை தொடரவும் தயங்கியதில்லை.
உன்னைச் சுற்றி எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும், உனது கடமையை தவறாமல் செய் என்பதற்கு தாடி பாலாஜி உண்மையில் ஒரு உதாரணம் தான்.
90'ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத தொடர் 'மாயாவி மாரீச்சன்'. சன் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடரில் நம்ம பாலாஜியும் நடித்திருப்பார். 90'ஸ் கிட்ஸோடு அப்போதே டிராவல் செய்யத் தொடங்கிவிட்டார். அதில் லீட் ரோலே பாலாஜி தான்.
அதன் பிறகே, அவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். 1997ம் ஆண்டு, நந்தினி எனும் திரைப்படம் மூலம் பெரிய திரையில் நுழைந்த பாலாஜி, அஜித், விஜய் முதல் ரஜினி வரை அனைத்து உச்சபட்ச ஸ்டார்களுடனும் நடித்துவிட்டார்.
குறிப்பாக, வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் இவர் அடித்த காமெடி லூட்டிகளுக்கு என்றே ரசிகர்கள் உள்ளனர்.
சரியாக, 2010ம் ஆண்டு மீண்டும் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைக்கும் பாலாஜி, அதன் பிறகு, சின்னத்திரையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
சீரியல் நடிகர், சினிமா நடிகர், காமெடி நடிகர், மீண்டும் சின்னத்திரை நடிகர், டான்சர், ஆங்கர், பிக்பாஸ் ஷோ கண்டெஸ்டென்ட், ஜட்ஜ் என்று கேப் கிடைக்கும் இடமெல்லாம் புகுந்து தன்னால் முடிந்த ஆளுமையை செலுத்தி இன்று இந்தளவுக்கு புகழடைந்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு இடர்கள் இருந்தாலும், தனது இருப்பை இன்னமும் அதே உச்சியில் வைத்திருப்பதில் கில்லாடியான பாலாஜிக்கு, உண்மையில் கிடைத்த மிகப்பெரிய சொத்து என்றால், அது நண்பர் ஈரோடு மகேஷ் தான்.
பாலாஜியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத நண்பர் மகேஷ் இருப்பதாலேயோ என்னவோ, பாலாஜி பலமோடு இன்னும் வலம் வருகிறார்.