கல்யாண வீட்டு தடியங்கா கூட்டு : செம்ம ருசியா இருக்கும்

ஒரு முறை தடியங்கா வைத்து இப்படி கூட்டு செய்து பாருங்க. சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

ஒரு முறை தடியங்கா வைத்து இப்படி கூட்டு செய்து பாருங்க. சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
sdaa

ஒரு முறை தடியங்கா வைத்து இப்படி கூட்டு செய்து பாருங்க. சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

1 வெங்காயம் நறுக்கியது

Advertisment
Advertisements

தடியங்கா- 1 நறுக்கியது

சிறிய அளவு உப்பு

மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்

தண்ணீர் 1 கப்

அரை மூடி தேங்காய்

சீரகம் – அரை ஸ்பூன்

மிளகாய் – 4

பூண்டு – 4 பல்லு

கடலை பருப்பு வேங்க வைத்தது – 3 டேபிள் ஸ்பூன்

3 ஸ்பூன் தயிர்

தாளிக்க: 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய், கடுகு, 2 வத்தல், உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம் 1 ஸ்பூன் நறுக்கியது.

செய்முறை: தடியங்காவை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். தொடர்ந்து நிறம் மாறியதும், தடியங்காவை சேர்த்துகொள்ளவும். இதை நன்றாக வதக்க வேண்டும். அதில் மஞ்சள் பொடி சேர்க்கவும். இதில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துகொள்ளவும்.  இதை கூட்டில் சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து அதில் அவித்த கடலை பருப்பை சேர்க்கவும். தொடர்ந்து அதில் உப்பு, தயிர் சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். அடுப்பை அணைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, 2 வத்தல், உளுந்தம் பருப்பு , கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து கூட்டில் கொட்டவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: