/indian-express-tamil/media/media_files/bzsBwkwPO78ozMzyzYya.jpg)
தை அமாவாசை ஆனது பிப்ரவரி 9ம் தேதி நாளை வருகிறது. காலை 8.50 மணிக்கு துவங்கிபிப்ரவரி 10ம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு முடிவடையும். காலையில் துவங்கிவிடுவதால் காலையில் நீராடி முன்னோர்களை வணங்க வேண்டும்.
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை திதி கொடுக்க நல்ல நேரம். பொதுவாக ஒவ்வோரு அமாவாசைதினங்களிலும்தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
அப்படி தர்ப்பணம் கொடுப்பார்கள் நீர் நிலைகள், ஆறு நதிக்கரைகளில் கொடுப்பது மிகவும் விசேஷமானது. ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவோரு ஆண்டும், இறந்த அதே திதியில் நம் வீட்டில் அல்லது கோயிலுக்கு சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். இதில் பிண்டம் வைத்து வழிபடுவதுசிறந்தது.
தாய்,தந்தை இல்லாத ஆண்களும், கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
அமாவாசை நாளான்று நண்பகல் 12 மணிக்கு முன்பு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதிகாலை நான்கு மணியளவில் இருந்து கொடுக்க ஆரம்பித்து விடலாம். சூரிய உதயம் முன்பு பிரம்ம முகூர்த்தம் இருப்பதால்சூரியன் வந்தபிறகுகொடுக்க வேண்டும் என்று கிடையாது. பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது புண்ணியமாகும். ராகு காலம், எம கண்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.