தை அமாவாசை பிப்ரவரி 9ம் தேதி வருகிறது. பிப்ரவரி 9, 2024 அன்று காலை 8.02 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 10, 2024 அன்று அதிகாலை 04.28 மணிக்கு முடிவடைகிறது.
ஆத்மா மரணமடைந்த பிறகு பித்ரு லோகத்தை நோக்கி தனது பயணத்தை மேற்கொள்ளும். அது முன்னோர்களுக்கான பூமி அங்கே அவர்கள் மறுபிறவிக்கு முன்பு தங்கியிருப்பார்கள். இவர்கள் பித்ருலோகத்தில் வாழும் போது, பசி மற்றும் தாகத்தின் வேதனையை உணர்கிறார்கள். முன்னோர்கள் ஆசிர்வாதத்தை பெற நம்பிக்கையுடன் அன்புடனும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
சடங்குகள் என்ன?
இந்நாளில் மக்கள் தனது முன்னோர்களை நினைவு கூறுகின்றனர். ஹோமம், தர்பணம் , தானம் போன்ற சடங்குகள் செய்கின்றனர். புண்ணிய ஸ்தளங்களுக்கு, யாத்திரை , நீர் நிலைகளில் முன்னோர்களுக்காக தர்ப்பண்ம் செய்கிறார்கள்.
தர்ப்பணத்தின்போது எள்ளும், நீரும் பிரசாதமாக வழங்கப்படும். இது தடைகளை கடக்க உதவுகிறது. தர்ப்பணம் செய்வதால், கடந்த கால சாபங்கள் நீங்க உதவுகிறது. மேலும் முன்னோர்களின் ஆசைகளையும் நிறைவேற்றுகிறது.
பலன்கள் என்ன?
இது உடல் நலம், செல்வம் மற்றும் உறவுகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கிறது. முன்னோர்கள் அனுமதி மற்றும் நீண்ட ஆயுளுக்காக அளுள்பாலிக்கிறார்கள். தங்கள் சாபத்திலிருந்து விடுபட்டு அடுத்தடுத்த வாழ்க்கையே தொடர்வார்கள்.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“